இன்னிசை தென்றல் தேவாவை களத்தில் இறக்கிய ஜீ தமிழ்! சரிகமப இந்த வார கொண்டாட்டம்

SaReGaMaPa Li'l Champs Season: சரிகமப ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி மூன்றாவது சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 8, 2023, 01:13 PM IST
  • சரிகமப ரியாலிடி ஷோ
  • இன்னிசை தென்றல் தேவா
  • இசையில் மயங்கும் நடிகை அபிராமி
இன்னிசை தென்றல் தேவாவை களத்தில் இறக்கிய ஜீ தமிழ்! சரிகமப இந்த வார கொண்டாட்டம் title=

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நம்பர் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருந்து வருகிறது சரிகமப இசை நிகழ்ச்சி. சீனியர்களுக்கான மூன்றாவது சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா தொகுத்து வழங்க, ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். தற்போது மொத்தம் 19 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக தொடர்ந்து வருகின்றனர். 

நடிகை அபிராமி

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் இன்னிசை தென்றல் தேவா ரவுண்ட் நடைபெற உள்ளது. இதற்கு சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் தேவா அவர்களே பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சியில் தேவா பாடிய பாடலுக்கு மனம் விட்டு சிரித்து மகிழ்ந்தார் நடிகை அபிராமி.

நடுவர் குழுவில் இணைந்த மூன்றாவது புதிய நீதிபதி அபிராமி ஆவார். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் தொகுப்பாளராக ஆறாவது முறையாக அர்ச்சனா சந்தோக் திரும்பியுள்ளார். சிறப்புத் தேவைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட குழந்தைகள் உட்பட, பல்வேறு பின்னணியை சேர்ந்த சிறுவர்களின் திறமையை வெளில்க் கொண்டு வருகிறது.

மேலும் படிக்க | 27 ஆண்டுகளாக வாடகை வீடு..! சொந்த வீட்டுக்கு செல்லும் முன் உயிரிழந்த சோகம்

சரிகமப மெகா ஆடிஷன்களில் மூன்று நடுவர்களும் சிறப்பு நடுவர்களும் மனோ மற்றும் வைக்கம் விஜயலட்சுமி போன்ற நன்கு பிரபலமான பின்னணிப் பாடகர்களும் கலந்துக் கொண்டனர்.

இது குறித்து ஒரு மாஸான ப்ரோமோ வீடியோவை ரிலீஸ் செய்துள்ளது ஜீ தமிழ் தொலைகாட்சி, இதனால் இந்த வார சரிகமப நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்காக அதிகரித்துள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் தேவா முன்னிலையில் அவரது பாடல்களை தேர்ந்தெடுத்து பாட உள்ளனர். 

எனவே சரிகமப நிகழ்ச்சியை வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள். 

மேலும் படிக்க | டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதே மாரிமுத்துக்கு மாரடைப்பு: எதிர்நீச்சல் திருச்செல்வம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News