தக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோ

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 6, 2024, 11:26 AM IST
  • தக் லைஃப் படத்தில் பாலிவுட் நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • தக் லைஃப் படத்தில் இணைந்துள்ள மற்றொரு முக்கிய நடிகர் சிம்பு.
  • டெல்லியில் தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
தக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோ title=

Kamal Haasan and Simbu Shoots Thug Life: வட இந்தியாவில் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தக் லைஃப் திரைப்படம்:
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான நாயகன் படம் மெகா ஹிட் அடித்தது. இதையடுத்து, 36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கைக்கோர்த்துள்ள படம் தான் தக் லைஃப் (Thug Life). கமலின் 234வது படமான இதன் டைட்டில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியனது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தக் லைஃப் படக்குழு விவரம்:
தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதில் ஒருவர், த்ரிஷா ஆவார். இவர், ஏற்கனவே கமலுடன் சில படங்களில் இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தற்போது, 3வது முறையாக தக் லைஃப் படத்தில் அவருடன் கைக்காேர்த்திருக்கிறார். இது மட்டுமன்றி, மனிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் இவர் ஏற்கனவே பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இளையராஜா குறித்த கேள்வி - வைரமுத்து கொடுத்த ரியாக்சன்!

தக் லைஃப் படத்தில் இணைந்துள்ள மற்றொரு முக்கிய நடிகர் சிம்பு ஆவார். இவரும் ஏற்கனவே மணி ரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார். இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார் சிம்பு. அதனைத் தொடர்ந்து தற்போது கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வட இந்தியாவில் டெல்லியின் சங்கட் மோச்சன் ஹனுமான் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. மேலும் வரும் மே 12 ஆம் தேதி டெல்லியில் ஷூட்டிங் நடைபெறும். இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன், அபிராமி, நாசர், சிம்பு மற்றும் வையாபுரி ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

அதுமட்டுமின்றி இவர்களுடன் இந்த திரைப்படத்தில் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல் ஆகிய பாலிவுட் நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘மிர்சாபூர்’ இணையத் தொடர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் இவர்கள் இருவரும் பங்கேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | தமிழில் அறிமுகமாகி உள்ள புதிய ஓடிடி தளம்! மாதம் ரூ.29 கட்டினால் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News