தமிழ்நாட்டில் இருந்து அனிருத்தை கடத்திட்டு போய்டுவேன் - விஜய் தேவரகொண்டா

செப்டம்பர் 1 அன்று எங்க படம் குஷி வெளியாகிறது. கண்டிப்பாக எல்லோரும் பாருங்க உங்களுக்கு குஷி ஏற்படுத்தும் என்று தமிழில் பேசினார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 21, 2023, 08:55 PM IST
  • ரஜின்காந்த்தின் ஆறு படம் தோல்வி தான் - விஜய் தேவரகொண்டா
  • எண்ணித் துணிக கருமம் திருக்குறளை மேடையில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா
தமிழ்நாட்டில் இருந்து அனிருத்தை கடத்திட்டு போய்டுவேன் - விஜய் தேவரகொண்டா title=

குஷி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அப்டேட்: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகை சமந்தா ஆகியோர் நடித்துள்ள குஷி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார்.

அப்போது ஆர்பி சௌத்ரி பேசியபோது, தெலுகு படம் என்பதால் பாடல்கள் கமர்ஷியல் ஆக இருக்கும் என்று நினைத்தேன, ஆனால் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் கிளாஸ் ஆக இருக்கிறது.

நான் ஏற்கனவே நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஒரு படம் பண்ணினேன் (துவாரகா), ஆனால் அது எனக்கு குஷி ஏற்படுத்தவில்லை. அதனால் அவர் மறுபடியும் என்னுடன் இணைந்து ஒரு படம் பண்ணி குஷி ஏற்படுத்த வேண்டும் என்றார் ஆர்பி சௌத்ரி.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: சுபாஷ்க்கு சொப்னா கொடுத்த அதிர்ச்சி.. காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட்

அடுத்து நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியபோது, செப்டம்பர் 1 அன்று எங்க படம் குஷி வெளியாகிறது. கண்டிப்பாக எல்லோரும் பாருங்க உங்களுக்கு குஷி ஏற்படுத்தும் என்று தமிழில் பேசினார்.

இந்த திரைப்படத்தில் நாயகன் கதாபாத்திரம் மணிரத்னம் ரசிகர், படத்தில் மட்டுமல்ல எங்கள் படத்தின் இயக்குனரும் பெரிய மணிரத்னம் ரசிகர் என்பதால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். எண்ணித் துணிக கருமம் என்னும் திருக்குறளை மேடையில் பேசினார் விஜய் தேவரகொண்டா. சமந்தாவிற்கு ஓய்வு தேவை படுகிறது. முதல்முறையாக அவர் ஓய்வு எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்காவில் இருக்கிறார்.நானும் அவர் இங்கு இல்லாததில் வருத்தமடைகிறேன். அவர் ஒவ்வொரு முறையும் சொல்வார் நான் பல்லாவரம் பெண் என்று.

தமிழில் எனக்கு நிறைய நடிகர்கள் இயக்குனர்கள் பிடிக்கும்.ஆனால் ஒருவரை தமிழ்நாட்டில் இருந்து ஒருவரை கடத்தி செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக நான் இசையமைப்பாளர் அனிருத்தை கடத்தி சென்று விடுவேன். ஒவ்வொரு நடிகருக்கும் வெற்றி தோல்வி இருக்கும்.ரஜினிகாந்திற்கு கூட வரிசையாக ஆறு படம் தோல்வி,இதன் பிறகு தான் ஜெயிலர் வெளியாகி 500 கோடி வசூல் செய்திருக்கிறது.கமல் கூட விக்ரம் மூலமாக கம் பேக் கொடுத்திருக்கிறார். சமந்தா நோய்வாய் படுவதற்கு முன்பு 60 சதவீத படமும் பின்பு 40 சதவீதம் எடுக்கப்பட்ட படம் தான் இந்த திரைப்படம்.

குஷி படம்:

நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கு திரையுலகில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘குஷி’. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்து காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா நிர்வாணா. மேலும் இந்த திரைப்படத்தில் ஜெயராம், சச்சின் கேதகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகினி, சரண்யா பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் முரளி ஜி ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஹேஷம் அப்துல் வஹாப். மேலும் அனைத்து மொழி ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பெற்றிருக்கும் குஷி திரைப்படம் இந்த ஆண்டின் வெற்றி படமாக அமைய அதிகபடியான வாய்புகள் உள்ளது என திரையுலகில் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சூப்பர்ஸ்டார் என்றாலே ரஜினி தான்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News