இளையராஜா குறித்த கேள்வி - வைரமுத்து கொடுத்த ரியாக்சன்!

எம்எஸ்வி உயிராக இருந்திருக்கிறார், கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார். உடலும் உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்கிற குழந்தை பிறந்திருக்கிறது - வைரமுத்து.  

Written by - RK Spark | Last Updated : May 6, 2024, 10:43 AM IST
  • எம்எஸ்வி உயிராக இருந்திருக்கிறார்.
  • கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார்.
  • கவிப்பேரரசு வைரமுத்து மதுரையில் பேட்டி.
இளையராஜா குறித்த கேள்வி - வைரமுத்து கொடுத்த ரியாக்சன்! title=

உடலா உயிரா என்று கேட்டால் என்ன பதில் வருமோ அதுதான் எம்எஸ்வியா கண்ணதாசனா என்கிற கேள்விக்கு பதில். எம்எஸ்வி உயிராக இருந்திருக்கிறார், கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார் என்று கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி அளித்துள்ளார். மதுரை வலையங்குளம் பகுதியில் வணிகர்கள் விடுதலை முழக்க மாநாடு நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்றார். மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், இன்று கார்ல் மார்க்சின் பிறந்தநாள், மாநாடு நடைபெறும் இந்த ஊரும் பொருள் உடையது. மதுரையில் கோவில் உண்டு, மலை உண்டு, ஆனால் கடல் இல்லை விக்கிரம ராஜா வணிகர்களை ஒருங்கிணைத்து ஒரு கடலை உருவாக்கி இருக்கிறார். 

மேலும் படிக்க | CWC 5: குக் வித் கோமாளி 5-ல் புதிய கோமாளி! அட ‘இந்த’ சீரியலின் வில்லி நடிகையா..

ஒரு முனை வரியை கொண்டு வந்தது உங்கள் அமைப்பு. நுழைவு வரியை நிருத்தியது உங்கள் அமைப்பு. கொரோனா காலத்தில் இந்த வணிகர் சமுதாயம் தமிழர்களின் உயிரை காப்பாற்றியது. தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று வணிகர் சங்க மாநாட்டில் வைரமுத்து கோரிக்கை வைத்தால் அதை ஏற்று தமிழில் பெயர் பலகை வைப்போம் என்று வணிகர் சங்கத்தினர் உறுதி அளித்தனர்.  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து கூறுகையில், இளையராஜா விவகாரம் குறித்து பேசக்கூடாது என்று சொல்லிவிட்டேன். எம்எஸ்வியா? கண்ணதாசனா? என்ற கேள்விக்கு, உடலா உயிரா என்று கேட்டால் என்ன பதில் வருமோ அதுதான் எம்எஸ்வியா கண்ணதாசனா என்கிற கேள்விக்கு பதில். 

எம்எஸ்வி உயிராக இருந்திருக்கிறார், கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார். உடலும் உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்கிற குழந்தை பிறந்திருக்கிறது. இந்த மாநாடு பயனுள்ளதாக அமைந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளை ஒன்றிய அரசும் மாநில அரசும் பரிசீலனை செய்யும் என்று நான் நம்புகிறேன். வணிகர்கள் தான் ஒரு சமூகத்தின் இரத்த ஓட்டம். வணிகர்கள் தான் பல்வேறு இடங்களில் விளையும் பொருட்களை நமது வீட்டுக்குள் கொண்டு வந்து உதிரத்தில் சேர்க்கிறார்கள் வணிகர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

மேலும் படிக்க | மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்! நெறிமுறைகள் என்னென்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News