கார்த்திகை தீபம்: கார்த்திக்கு கிடைத்த பாராட்டு, புலம்பி தவிக்கும் அபிராமி..!

Zee Tamil Karthigai Deepam TV Serial Today's Episode: கார்த்திக்கு கிடைத்த பாராட்டு, புலம்பி தவிக்கும் அபிராமி.. நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 21, 2024, 03:29 PM IST
கார்த்திகை தீபம்: கார்த்திக்கு கிடைத்த பாராட்டு, புலம்பி தவிக்கும் அபிராமி..! title=

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கோவிலுக்கு சென்றிருந்த போது அங்கு தீபாவை பார்க்க கூடிய கூட்டத்தில் சிக்கி அபிராமி கீழே விழுந்து காயம் ஏற்பட அவள் தீபா மீது கோபத்தை காட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது அபிராமியும் தீபாவும் வீட்டிற்கு வர கையில் காயத்துடன் இருக்க அருணாச்சலம் என்னாச்சு என்று கேட்க நடந்த விஷயத்தை சொல்கிறாள். பிறகு ரூமுக்கு வந்து கார்த்திக் போட்டோவை எடுத்து பார்த்து கொண்டிருக்க அந்த போட்டோ கீழே விழுந்து உடைய அபிராமி ஜோசியர் சொன்னதையெல்லாம் நினைத்து பார்த்து பயப்படுகிறாள். அடுத்து கார்த்திக் ஆபிஸ் வர அங்கு எல்லாரும் கை தட்டி வாழ்த்து சொல்கின்றனர். இதனையடுத்து கார்த்தியும் நீங்கள் செய்ததும் பெரிய உதவி என்று பாராட்டி நன்றி தெரிவிக்கிறான். 

பிறகு சினேகாவை பார்த்து என்ன சினேகா கச்சேரிக்கு நீங்க வரவே இல்லை என்று கேட்க இல்ல சார் கொஞ்சம் பெர்சனல் வேலை இருந்ததாக சொல்ல கார்த்திக் மேலேயும் கீழேயும் பார்க்க சினேகா உண்மையாகவே கொஞ்சம் வேலை இருந்தது சார். அதனால் தான் வர முடியல. எனக்கும் கச்சேரிக்கு வரணும் என்ற ஆசை இருந்தது என்று சொல்கிறாள். 

மேலும் படிக்க | D 50 Title: மொட்டை தலை லுக்கில் தனுஷ்! டி 50 டைட்டில் என்ன தெரியுமா?

அடுத்து இளையராஜா கார்த்திக்கிடம் தீபா பாட கூடாதுனு எவ்வளவு தடை எவ்வளவு எதிரிகள் என்று பேச வீட்லயே ஐஸ்வர்யா அண்ணி எல்லாம் இருக்காங்க என்று சொல்கிறான். பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர தீபா சோகமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க கோவிலில் அபிராமி கீழே விழுந்ததையும் தன்னை திட்டிய கதையையும் சொல்கிறாள். கார்த்திக் சரி ப்ரீயா விடுங்க, நான் பார்த்துக்கறேன் என்று பர்ஸ்ட் எயிட் பாக்ஸை எடுத்து கொண்டு அபிராமியை பார்க்க வருகிறான். 

இங்கே அபிராமி அருணாச்சலத்திடம் ஜோசியர் சொன்ன விஷயங்களையும் தனக்கும் இருக்கும் பயத்தையும் சொல்ல கார்த்திக் இதை கேட்டு விடுகிறான். பிறகு கார்த்திக் ரூமுக்குள் வர இவர்கள் பேச்சை நிறுத்தி விடுகின்றனர், கார்த்திக் அபிராமிக்கு மருந்து போட்டு சாப்பாடு ஊட்டி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கதாநாயகனாக அறிமுகமாகும் தங்கர் பச்சானின் மகன் விஜித்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News