கார்த்திகை தீபம் அப்டேட்: மீனாட்சி தாலியை வீசி எறிந்த ரியா.. அபிராமிக்காக தீபா விட்ட அறை

Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 16, 2024, 01:41 PM IST
  • கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்.
  • ஷாக் ஆகும் ஆனந்த்.
  • டென்ஷனாகும் அபிராமி.
கார்த்திகை தீபம் அப்டேட்: மீனாட்சி தாலியை வீசி எறிந்த ரியா.. அபிராமிக்காக தீபா விட்ட அறை title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மில்லில் மிஷின் ஓடாதது அறிந்து அவனே சரி செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஷாக் ஆகும் ஆனந்த 

அதாவது கார்த்திக் மிஷினை சரி செய்ததும் ஆனந்த் இன்ஜினியருக்கு போன் போட்டு நீ தான் மிஷினை ரெடி பண்ணியா என்று கேட்க அவன் இல்லை என்று சொல்ல வெளியே வந்து பார்க்க மேனேஜர் கார்த்திக் சார் தான் மிஷினை ரெடி பண்ணாரு என்று சொல்ல ஆனந்த் ஷாக் ஆகிறான். 

மறுபக்கம் வீட்டில் ஐஸ்வர்யா ரியாவை கூப்பிட்டு நீ முதலில் அபிராமி மனசில் இடம் பிடிக்கணும், அவங்க வாயால் நீ தான் என் மருமகள் என்று சொல்லணும். அதுக்கான வேலைகளை நீ செய்யணும் என்று சொல்கிறாள். மேலும் பூஜை ரூமுக்கு சென்று பூஜை செய்து ஆரத்தி தட்டை கொண்டு போய் அபிராமி கிட்ட நீட்டுனா அவங்களே உன்னை மருமகளா ஏற்று கிட்டு கட்டி தழுவுவாங்க என்று ஐடியா கொடுக்கிறாள். 

மேலும் படிக்க | ஷங்கர் மகள் திருமணத்தில் குத்து டான்ஸ் ஆடிய அட்லீ-ரன்வீர் சிங்! வைரல் வீடியோ..

டென்ஷனாகும் அபிராமி

இதையடுத்து ரியா பூஜையறைக்குள் செல்ல மீனாட்சி கழட்டி கொடுத்த தாலி அங்கு இருக்க ரியா மீனாட்சி சார்ந்த எந்த பொருளும் இந்த வீட்டில் இருக்க கூடாது என்று தூக்கி வெளியே வீச அபிராமி அதை பார்த்து டென்ஷனாகிறாள். எப்படி நீ பூஜா ரூமுக்கு வரலாம்? அந்த தாலியை தொடலாம் என்று ஆவேசப்பட்டு பேச ரியா நான் தான் உங்க மூத்த மருமகள் என்று எதிர்த்து பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக ரியா அபிராமியை பிடித்து தள்ளி விடுகிறாள். 

கீழே விழ அபிராமியை தீபா தாங்கி பிடித்து அத்தை மேலே கையை வைக்கிறியா என்று ரியாவை அறைகிறாள். பிறகு ஐஸ்வர்யாவை சந்தித்து நடந்ததை சொல்லும் ரியா இதை ஆனந்திடம் சொல்ல போவதாக சொல்ல ஆனந்துக்கு சொன்னீனா என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆச்சுனு கேட்பான். நீ அபிராமியை பிடித்து தள்ளுனது தெரிந்தா அம்மா பாசத்தில் உன்னையே வெளியே போக சொல்லிடுவான் என்று தடுக்கிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News