பிரேசில் வெற்றி பெற்ற கால்பந்து மைதானம் விரைவில் இடிப்பு! ஏன் தெரியுமா?

உலக கோப்பைக்காக கத்தாரில் கட்டமைக்கப்பட்ட ஸ்டேடியம் 974 மைதானம் விரைவில் இடிக்கப்பட உள்ளது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 6, 2022, 06:50 PM IST
  • பிஃபா உலக கோப்பை மைதானம்
  • விரைவில் இடிக்கப்படுவதாக அறிவிப்பு
  • மெஸ்ஸி, ரொனால்டோ விளையாடிய மைதானம்
பிரேசில் வெற்றி பெற்ற கால்பந்து மைதானம் விரைவில் இடிப்பு! ஏன் தெரியுமா? title=

கத்தாரில் பிஃபா உலககோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடருக்காக பிரத்யேகமாக கத்தாரில் ஸ்டேடியம் 974 மைதானம் உருவாக்கப்பட்டது. காலிறுதிக்கு முன்னேறுவது யார் என்ற போட்டியில் மோதிய தென்கொரியா மற்றும் பிரேசில் அணிகள் இந்த மைதானத்தில் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பிரேசில் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த மைதானம் 974 முற்றிலுமாக அகற்றப்பட இருக்கிறது.

மேலும் படிக்க | தீபிகா படுகோனேவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்!

உலக கோப்பைக்காக கட்டமைக்கப்பட்ட இந்த மைதானதை உருவாக்குவதற்காக பயன்படுத்தபட்ட கப்பல் கொள்கலன்களின் எண்ணிக்கையை கொண்டு மைதானத்துக்கு ஸ்டேடியம் 974 என பெயரிடப்பட்டது. இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 7 உலககோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு இருக்கிறது. மைதானம் கட்டப்படும்போதே மறு சுழற்சிக்காக பயன்படுத்தும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டது. 

974 மைதானம் கண்ணை கவரும் பல வண்ண கப்பல் கொள்கலன்களை கொண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த கொள்கலன்கள் கழிவறைகளையும், உட்புற அமைப்புகளையும் கொண்டிருக்கும். உலக கோப்பைக்காக வடிவமைக்கப்பட்ட இந்த மைதானத்தில் இருந்து பிரித்தெடுக்கும் பாகங்கள் எங்கு கொண்டு செல்லப்படும் என்ற தகவல் தெரியவில்லை. இந்த மைதானத்தில் நெய்மர், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோர் கோல்கள் அடித்துள்ளனர்.

மேலும் படிக்க | Round of 16 : மெஸ்ஸியின் புதிய சாதனை... காலிறுதியில் கால் வைத்தது அர்ஜென்டீனா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News