கொடைக்கானல் வர இ-பாஸ் கட்டாயம்.. 13 இடங்களில் இ-பாஸ் சோதனை

நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை இ - பாஸ் முறையானது அமலுக்கு வந்ததுள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 13 வழித்தடங்களிலும் இ- பாஸ் சோதனை நேற்று முதல் நடந்து வருகிறது.   

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 7, 2024, 01:39 PM IST
  • நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் இ-பாஸ்.
  • இ-பாஸ்களில் மூன்று வகையான அடையாளக் கோடுகள் வழங்கப்பட்டுள்ளது.
  • நீலகிரி மாவட்டத்தில் அனைத்து செக் போஸ்ட்களிலும் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் வர இ-பாஸ் கட்டாயம்.. 13 இடங்களில் இ-பாஸ் சோதனை title=

கோவையில் இருந்து நீலகிரி செல்லக்கூடிய சாலையில் மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு தூரிப்பாலம் சோதனைச் சாவடியில் சோதனை நடந்தது. இதில் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் இ-பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இ- பாஸ் பெறாத வாகனங்களை நிறுத்தி, இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகளை சொல்லி, வருவாய் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி, இ_பாஸ் எடுத்த பின்னரே அனுமதிக்கின்றனர். 

இந்த இ-பாஸ்களில் மூன்று வகையான அடையாளக் கோடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் உள்ளூர் பகுதி பொதுமக்களுக்கு பச்சை நிற அடையாள கோடும் , வேளாண் விளைபொருட்களை கொண்டு செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் அடிப்படை தேவை, சரக்கு வாகனங்களுக்கு நீல நிற அடையாளக்கோடும், சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிற அடையாளக்கூடும் இந்த இ பாஸில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கடன் தொல்லையால் பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்த இளைஞர்!

இதனிடையே, நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா, மேட்டுப்பாளையம் கல்லார் தூரி பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள இ - பாஸ் சோதனை சாவடியினை நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து செக் போஸ்ட்களிலும் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இ- பாஸ் ஸ்கேன் செய்வதற்காகவே ஆட்கள் போடப்பட்டுள்ளனர். இ - பாஸ் குறித்து தெரியாமல் வருபவர்களுக்கு, அதை எப்படி பதிவு செய்வது என்பதை சொல்லிக் கொடுப்பதுடன், அதிகாரிகளே இ-பாஸ் எடுத்துக் கொடுக்கின்றனர். இதில் சந்தோஷமான விசியம் என்னவென்றால், சுற்றுலா பயணிகளிடம் நான் விசாரித்த போது, அனைவருக்கும் இந்த இ- பாஸ் எடுப்பது எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர். தற்போது வரை இ- பாஸ் நடைமுறையில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. அனைத்து செக் போஸ்ட்களிலும் உதவி கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் கண்காணிப்பு பணிக்கு போடப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க | கோவை : சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News