மீண்டும் நாகசைதன்யாவுடன் இணையும் சமந்தா? இன்ஸ்டா பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்!

நடிகை சமந்தா விவாகரத்து பெற்ற நிலையில் மீண்டும் அவர் தனது முன்னாள் கணவருடன் இணைய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தனது இன்ஸ்டாவில் அவர் இதனை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.   

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Sep 21, 2023, 12:39 PM IST
  • சமந்தா முன்னாள் கணவருக்கு 2-ம் திருமணம்?
  • சமந்தா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
  • பழைய போஸ்டுகள் சில மீண்டும் பாலோயர்கள் பார்க்கும் படி மாற்றப்பட்டுள்ளது.
மீண்டும் நாகசைதன்யாவுடன் இணையும் சமந்தா? இன்ஸ்டா பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்! title=

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனது கணவர் நாக சைதன்யாவை கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிவதாக அறிவித்தார். இவர்கள் பிரிந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. சமீபத்தில் நாக சைதன்யாவுக்கு இரண்டாம் திருமணம் செய்ய பெண் பார்த்து வருவதாகக் கூட தகவல் வெளியானது. 

சமந்தாவும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இப்போது சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துள்ளார். இந்த சூழலில் தான் திடீரென சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் யாரும் பார்க்க முடியாதபடி மறைத்து வைத்திருந்த பழைய போஸ்டுகள் சில மீண்டும் பாலோயர்கள் பார்க்கும் படி மாற்றப்பட்டுள்ளது. அந்த போஸ்டுகள் தான் இப்போது சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. 

மேலும் படிக்க | சாய் பல்லவிக்கு கல்யாணம் ஆயிடுச்சா? வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன? 

அதற்கு காரணம் அவர் அனைவரும் பார்க்கும் படி மாற்றியது தனது முன்னாள் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தான். இதனைக்கண்ட அவரது ரசிகர்கள் மீண்டும் நீங்கள் இருவரும் இணைந்துவிட்டீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரின் பிறந்தநாளுக்கு போஸ்ட் செய்த பதிவு தான் இவர்கள் இணைந்துவிட்டார்களா என்று அனைவரையும் கேள்வி எழுப்ப செய்துள்ளது. 

இந்த பழைய போஸ்டுகள் மீண்டும் ஆன் செய்யப்பட்டிருப்பது தவறுதலாக நடந்ததா அல்லது இருவரும் இணைகிறார்களா என்பது தான் முக்கிய விவாதமாகவே ரசிகர்கள் மத்தியில் மாறியுள்ளது. நாக சைதன்யா பொன்னியின் செல்வனில் நடித்த நடிகை சோபிதாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வரும் இந்த சமயத்தில் சமந்தாவுடன் இணைவது குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதுவாக இருந்தாலும் சரி வி லவ் யூ சமந்தா எனவும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | த்ரிஷாவிற்கு விரைவில் திருமணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News