“என் மகளும் பாதிக்கப்பட்டாள் ஆனால்..” குஷ்பூ பதிவு..! ARR-க்கு பிரபலங்கள் ஆதரவு!

ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் ஏற்பட்டு குளறுபடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தி எழுப்பி இருந்தனர். பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை படு மோசமாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரம் அவருக்கான ஆதரவு குரலும் வலுத்து வருகிறது.   

Written by - Bhuvaneshwari P S | Edited by - RK Spark | Last Updated : Sep 12, 2023, 12:26 PM IST
  • சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சி.
  • சில குளறுபடிகளால் ரசிகர்கள் கோபம்.
  • சென்னை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
“என் மகளும் பாதிக்கப்பட்டாள் ஆனால்..” குஷ்பூ பதிவு..! ARR-க்கு பிரபலங்கள் ஆதரவு!   title=

கடந்த ஞாயிற்றுக்கிழமை பனையூரில் உள்ள மைதானம் ஒன்றில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு 25 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள இடம் இருந்த நிலையில், 40 ஆயிரம் பேர் வரை கூடியுள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருக்கைகளை மீறி டிக்கெட் விற்பனை செய்ததே அதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதுபற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது. பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்தனர். இந்நிலையில், நடிகை குஷ்பூ தனது எக்ஸ் தளத்தில், சென்னை கச்சேரியில் AR ரஹ்மான் ரசிகர்கள் எதிர்கொண்ட பெரும் குழப்பம் மற்றும் சிரமங்களைப் பற்றி கேள்விப்பட்டேன். ரஹ்மான் எப்போதும் தனது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் பார்த்துக் கொள்வார். டயமண்ட் பாஸ் இருந்தும் அனுமதி மறுகப்பட்டவர்களில் எனது மகளும் ஒருவர்.  அவர்கள் அந்த இடத்தை அடைய 3 மணி நேரத்திற்கு மேல் ஆனது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனாலும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பொறுப்பேற்க முடியாது. 

மேலும் படிக்க | ‘தலைவர் 171’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ARR நேரலை நிகழ்ச்சிக்காக நிரம்பி வழியும் கூட்டத்தைப் பற்றி உணராத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் முழுமையான தோல்வி இது. ரஹ்மான் தனது இசை, வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் எப்போதும் அன்பையும் அமைதியையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடன் நின்று, எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவோம் என தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் ரஹ்மான் சாரை 3 தசாப்தங்களுக்கும் மேலாக அறிந்திருக்கிறோம், நேசிக்கிறோம்... கச்சேரியின் போது நடந்தது துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும், அவர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார் என்று தெரியும். ரஹ்மான் சார் எப்போதும் தனது அன்பை அனைவருக்கும் கொடுப்பதால், அவர் மீது வெறுப்பை விட அன்பை கொடுங்கள் என அனைத்து ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மானின் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அவர் எக்ஸ் தளத்தில் ஷேர் செய்துள்ள ஒரு பதிவில், நிகழ்ச்சி அன்று நடந்த அனைத்து தவறுகளுக்கும் 100 சதவீதம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம். ஆனாலும் ரஹ்மான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நெஞ்சே எழு இசைகச்சேரியை நடத்தினார். 2018-ம் ஆண்டு கேரள மழை வெள்ள பாதிப்புகளுக்கு உதவ வெளிநாட்டில் ஒரு இசைக்கச்சேரியை நடத்தினார். கோவிட் சமயத்தில் பல குடும்பங்களுக்கு உதவினார் என அந்த பதிவில் இடம்பெற்றுள்ளது. அதோடு ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி தவறாக பேசும் முன் யோசியுங்கள் எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கதீஜா ஷேர் செய்த பதிவு ஏ.அர்.ரஹ்மான் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது தான். இவர்களை அடுத்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட பதிவில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தயாரிப்பாளர்களும் இந்த சம்பவத்தை கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியம். நாங்கள் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது அனைத்தும் சுமூகமாக நடப்பதையும், மக்கள் பாதுகாப்பாக இருப்பதையும் கண்காணிக்க தயாரிப்பாளர்கள் மேல் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது உண்மையில் மனதை கனக்கச் செய்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும்  திட்டமிடல் உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக பங்கெடுக்க அனைத்து கலைஞர்களுக்கு இந்த சம்பவம் எச்சரிக்கை மணியாக அடித்திருக்கிறது. இந்த விஷயத்தில் சக கலைஞராக நான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நான் நிற்கிறேன்” என தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து பல பிரபலங்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சுத்தமா‌ Vibe ‌இல்ல... கடுப்பாக இருந்ததா‌ விஜய் ஆண்டனி‌ கச்சேரி...? - ரசிகர்கள் ரியாக்சன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News