தமிழில் படம் இயக்கும் அனுராக் காஷ்யப்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

Anurag Kashyap Movie: பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழ் படம் ஒன்றில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : Dec 9, 2023, 05:46 PM IST
  • பாலிவுட் திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப்.
  • இவர், தமிழில் படத்தை இயக்க உள்ளார்.
  • அதில் ஹீரோ யார் தெரியுமா?
தமிழில் படம் இயக்கும் அனுராக் காஷ்யப்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?  title=

பாலிவுட்டில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக விளங்குபவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் முதன் முதலாக ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்க உள்ளார் தெரியுமா?

அனுராக் காஷ்யப்:

தமிழ் ரசிகர்களுக்கு ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தெரிந்த முகமாக மாறியவர், அனுராக் காஷ்யப். இந்த படத்தில் பயங்கர வில்லனாக நடித்திருந்த இவரை, பார்த்தவுடன் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். தமிழே தெரியவில்லை என்றாலும் சரியாக வாயசைத்து படம் முழுக்க வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார். இதையடுத்து, சமீபத்தில் வெளியான ‘லியோ’ படத்திலும் சில நிமிடங்களுக்கு விஜய்யின் நண்பராக நடித்திருப்பார். லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர் இந்த ரோலை கேட்டு வாங்கியதாக கூறப்படுகிறது. இவர், தனக்கு தமிழ் உள்பட தென்னிந்திய மொழி படங்கள் பிடிக்கும் என கூறியிருக்கிறார். இவர் தற்போது தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார சினிமா குடும்பம் இதுதான்! சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

GV Praksh Kumar

தமிழில் இயக்கும் படம்..ஹீரோவாக நடிப்பது யார்?

அனுராக் காஷ்யப் தமிழில் இயக்கும் படத்தில் இசைமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிரச்து. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஜி.வி.பிரகாஷ் தனது நேர்காணலில் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். அந்த நேர்காணலும் வைரலாகி வருகிறது. 

ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படங்கள்:

ஜி.வி.பிரகாஷ் தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். ரிபெல், இடிமுழக்கம், 13, கள்வன் போன்ற படங்கள் அவரது ஹீரோவாக நடிக்க இருக்கும் லிஸ்டில் உள்ளது. மேலும், சைரன், எஸ்.கே.21, சூர்யா 43, சியான் 62 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவ்வளவு பட வேலைகளுக்கு மத்தியில் அவர் அனுராக்கின் படத்திலும் நடித்து வருகிறார். 

மேலும் படிக்க | டி.ஆர்.பியில் பின்வாங்கிய எதிர்நீச்சல்! முதல் இடத்தில் இருப்பது எந்த தொடர் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News