Suriya : அடடா! சூர்யா பேட்டிங் ஆட..டெண்டுல்கர் பவுலிங் போட.. காணக்கிடைக்காத வைரல் வீடியோ..

Actor Suriya Sachin Tendulkar Playing Cricket Viral Video : நடிகர் சூர்யாவும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Mar 7, 2024, 11:33 AM IST
  • மும்பையில் ஐஎஸ்பிஎல் போட்டி ஆரம்பித்தது
  • இந்த விழாவில் சூர்யா-சச்சின் கிரிக்கெட் விளையாடினர்
  • வைரலாகும் வீடியோ இதோ
Suriya : அடடா! சூர்யா பேட்டிங் ஆட..டெண்டுல்கர் பவுலிங் போட.. காணக்கிடைக்காத வைரல் வீடியோ.. title=

Actor Suriya And Sachin Tendulkar Playing Cricket Viral Video : மும்பையில், நேற்று (மார்ச் 6) இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ISPL) பாேட்டியின் தொடக்க விழா நடைப்பெற்றது. இதில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் சூர்யா, அக்ஷய் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, நடிகர் சூர்யா சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ISPL போட்டியின் தொடக்க விழா..

கிரிக்கெட் விளையாட்டில் திறமை பெற்று சிறந்து விளங்கும் சாமானியர்களுகாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுதா, ISPL T10 போட்டி. இதில், கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடுள்ளவர்கள் சாதிக்க, அவர்களுக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தரும் போட்டியாக, இது பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப விழா நேற்று மும்பையில் உள்ள டாடோஜி கொண்டாதேவ் மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் ராம் சரண், சூர்யா, அக்‌ஷய் குமார், போமன் இராணி, அமிப்தாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சச்சின் டெண்டுல்கரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். 

வைரலாகும் வீடியோ..

ஐஎஸ்பிஎல் போட்டியின் தொடக்க விழாவில் சச்சினும் சூர்யாவும் கிரிக்கெட் விளையாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் பிரபலங்கள் அனைவருமே விளையாடியுள்ளனர். தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், சச்சின் பவுலிங் போட, சூர்யா பந்தை அடித்து விளாசுகிறார். இருவரும் புன்முருவலுடன் விளையாடிய இந்த காட்சி, ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளது. 

நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய வீடியோ..

ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று அக்ஷய் குமார், சச்சின் டெண்டுல்கர், சூர்யா, ராம் சரண், போமன் இராணி ஆகியோர் கைகளை கோர்த்துக்கொண்டு ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | ராம்சரணுடன் இணைந்து நடிக்கும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!

சச்சின்-சூர்யா நட்பு:

நடிகர் சூர்யா, தனது சிங்கம் படம் வெளியானதில் இருந்தே இந்தியா முழுவதும் பிரபலமான ஹீரோவாக உள்ளார். இவருக்கு பாலிவுட்டிலும் பல ஆயிரம் ரசிகர்கள் உள்ளனர். இவரது சிங்கம் படம், இந்தியில் அதே பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது. இதில் ஹீரோவாக அஜய் தேவ்கன் நடித்திருந்தார். இப்படம் இந்தியிலும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து, சூர்யா இந்தி ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்த கலைஞராக இருக்கிறார். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடித்த சூரரை போற்று படமும் இந்தியில் ரீ-மேக் ஆகியுள்ளது. 

சூர்யாவுடன், பிற பாலிவுட் பிரபலங்கள் நல்ல நட்புடனேயே பழகி வருகின்றனர். அந்த வகையில் சச்சினும் சூர்யாவும் பரஸ்பர மரியாதையுடனும் நட்புடனும் வெளி இடங்களில் பழகி வருகின்றனர். சிறுவயதில் இருந்து சச்சினை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்த சூர்யா, அதை கடந்த ஆண்டு தீர்த்துக்காெண்டார். இந்த ஆண்டு அவருடன் கிரிக்கெட்டே விளையாடி விட்டார். 

மும்பையில் தங்கியிருக்கும் சூர்யா?

சென்னையில் தனது தாய், தந்தை, தம்பி, மனைவி-குழந்தைகளுடன் தங்கியிருந்த சூர்யா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் குடியேறி விட்டதாக கூறப்படுகிறது. இவரையும் இவரது குடும்பத்தினரையும் மும்பை விமான நிலையத்திலும், பிரபலமான இடங்களிலும் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பிற்காக மட்டும், சென்னைக்கு இவர் வந்து செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | கொரோனா குமார் படத்தில் இருந்து விலகிய சிம்பு! புதிய ஹீரோ இவரா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News