Vi Max 2500 ரூபாய் Swiggy பிளானை கொடுக்கும் வோடாஃபோன் மாதாந்திர ரீசார்ஜ் பிளான்

Vi Max + Swiggy One membership: Vi Max பயனர்கள் ரூ.500க்கு மேல் ரீசார்ஜ் செய்துகொள்பவர்கள், கூடுதல் கட்டணமின்றி ரூ.2500 மதிப்புள்ள Swiggy One மெம்பர்ஷிப்பைப் பெறலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 25, 2024, 08:14 AM IST
  • புதிய Vi Max போஸ்ட்பெய்ட் திட்டம்
  • Vi Max 500 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் Vi Max பிளான்
  • Swiggy One கூப்பன் மூன்று திட்டங்கள்
Vi Max 2500 ரூபாய் Swiggy பிளானை கொடுக்கும் வோடாஃபோன் மாதாந்திர ரீசார்ஜ் பிளான் title=

Vodafone Idea: Vi Max மாதாந்திர போஸ்ட்பெய்ட் திட்டங்களில் Swiggy One ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. வோடபோன் ஐடியா (Vi) நேற்று (ஜனவரி 24 புதன்கிழமை) அதன் Vi Max போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அதிக நன்மைகளுடன் புதுப்பித்துள்ளது.  ரூ.500க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் Vi Max பயனர்கள், கூடுதல் கட்டணமின்றி ரூ.2500 மதிப்புள்ள Swiggy One மெம்பர்ஷிப்பைப் பெறலாம். OTT நன்மைகள், மொபைல் பாதுகாப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய போஸ்ட்பெய்ட் திட்டங்களின் மற்ற சலுகைகளுடன் இந்த நன்மையும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
  
Vi Max போஸ்ட்பெய்ட் திட்டங்களில் Swiggy One
500 ரூபாய்க்கு மேல் Vi Max போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ்களுக்கான இந்தத் திட்டங்கள் பலரின் ஆதரவை பெற்றுள்ளது. 501 ரூபாய் ரீசார்ஜ், 701 ரூபாய் ரீசார்ஜ் மற்றும் ரூ 1101 ரெட் எக்ஸ் ரீசார்ஜ்  ஆகிய மூன்று போஸ்ட்பெய்ட் திட்டங்களும் இந்த புதிய திட்டத்தின் படி கூடுதல் பலன்களைப் பெறும் என்று Vi அறிவித்தது.  மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய Swiggy One இரண்டு கூப்பன்களும் இந்தத் திட்டத்தில் கிடைக்கும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்த திட்டத்தையும் ரீசார்ஜ் செய்யும் Vi Max பயனர்கள், Swiggy One கூப்பன்களைப் பெறாலாம். 6 மாதங்களுக்கு அமேசான் பிரைம், ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சூப்பர் மெம்பர்ஷிப், ஒரு வருடத்திற்கு Sony Live, ஒரு வருடத்திற்கு Sun NXT, EazyDiner கூப்பன்கள், EaseMyTrip இல் சலுகைகள் மற்றும் கடைசியாக ஒரு வருட நார்டன் போன்ற பலன்களுடன் இந்த ஆஃபர் வழங்கப்படும். 360 மொபைல் பாதுகாப்பு இலவசம்.

மேலும் படிக்க | ரூ 151 ரீசார்ஜ் பிளான்.. ஓவரா ஆஃபரை அள்ளிக்கொட்டிய பிஎஸ்என்எல்

மாதத்திற்கு ரூ.401 என்ற விலையில் மற்றொரு Vi Max திட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும், மேலே குறிப்பிட்டுள்ளபடி, இது Swiggy One சலுகையுடன் வராது, ஏனெனில் இதன் விலை ரூ. 500க்கு குறைவாக உள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் Amazon Prime மெம்பர்ஷிப்பும் இல்லை. மற்ற கூடுதல் நன்மைகள் அப்படியே இருக்கும்.

Vi அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த மாதாந்திர திட்டங்களை புதுப்பித்துவிட்டது. மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் போர்ட்டல்கள் வோடாஃபோனின் புதிய புதுப்பிப்பை அமல்படுத்தியிருக்கும் என்று நம்ப்ப்படுகிறது.

இதற்கிடையில், குடியரசு தினத்திற்கான சிறப்பு அறிவிப்பில், ஜியோ வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ரீசார்ஜ் தினம் ரூ.2,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 2.5 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டாவை 365 நாட்களுக்கு வழங்கும் இந்த ரீசார்ஜ் திட்டத்திற்கு மாதம் ரூ. 230 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது பயனர்களுக்கு செலவு குறைந்த மற்றும் விரிவான மொபைல் அனுபவத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின்படி, மை ஜியோ ஆப் மூலம் ஜனவரி 15 முதல் ஜனவரி 30 வரை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ஜியோ கூடுதல் சலுகைகளை வழங்குகிறது, இந்தத் திட்டத்திற்கு போட்டியால வோடாஃபோனின் ஸ்விக்கி ஒன் திட்டம் இருக்கும்.

மேலும் படிக்க | Jio Recharge Plan: ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்! இவ்வளவு பயன்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News