மைக்கேல் ஜாக்சனின் உருவம் பெற $ 42k-க்கு அறுவை சிகிச்சை செய்த ரசிகர்...

மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர் தன்னை ஜாக்சனை போன்று உருவத்தை மாற்றிக்கொள்ள சுமார் 11 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த இளைஞன்! 

Last Updated : Feb 8, 2019, 05:11 PM IST
மைக்கேல் ஜாக்சனின் உருவம் பெற $ 42k-க்கு அறுவை சிகிச்சை செய்த ரசிகர்...  title=

மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர் தன்னை ஜாக்சனை போன்று உருவத்தை மாற்றிக்கொள்ள சுமார் 11 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த இளைஞன்! 

மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்களை கொண்டவர். இவர் புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. அவருக்கு உலகம் முழுவதும் அவருக்காக எதையும் செய்யத் துணியும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி, அவரைப் போலவே அர்ஜண்டினாவைச் சேர்ந்த லொயோ ப்ளான்கோ (Leo Blanco) என்ற 22 வயது இளைஞன். மைக்கேல் ஜாக்சனைப் போன்று தனது  தோற்றத்தை மாற்றிக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்.

மைக்கேல் ஜாக்சனும் தன் வாழ்நாளில் பல காரனங்களுக்காக மூன்றிற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகளை மேற்கொண்டிருக்கிறார். இதற்காக 30,000 டாலர்கள் செலவு செய்திருக்கிறார். இந்திய மதிப்புப் படி 21,31,350 ரூபாயாகும். லியோ மைக்கேல் சாக்ஜனின் முகத்தைப் பெற ஒரு முறை இருமுறை அல்ல 11 முறை அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். ஒவொரு முறையும் அந்த சர்ஜரியில் திருப்தி இல்லை என்பதால் மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முகத்தில் சதைபற்று அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக 15 வயதிலிருந்தே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். கடைசியாக தற்போது மேற்கொண்டுள்ள அறுவை சிகிச்சையில் ஓரளவு மைக்கேல் சாக்சனின் முகத்தோடு ஒத்துப்போவதாக இருக்கிறதாம். அதை ஒட்டிதான் தற்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். இருப்பினும் அதில் திருப்தி இல்லை என்பதால் மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாமா என்கிற யோசனையில் இருக்கிறாராம்.

அவரது புகைப்படங்களை அவரது இணையபக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது இந்த தோற்றத்தில் வெளியே சென்றால் மக்கள் அவரை சூழ்ந்து கொள்கிறார்களாம். சிறு வயதிலிருந்தே மைக்கேல் ஜாக்சனால் ஈர்க்கப்பட்ட லியோ அவரைப் போலவே தனுடைய நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டிருக்கிறார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

segundo de thriller

A post shared by Leo Blanco (@leoblanco1) on

அவரைப் போன்ற பேச்சு, நடனம் , என எல்லாமே மைக்கிலைப் போலவே செய்வாராம். மைக்கேல் ஜாக்சனைப் போல், இவரும் மேடை பாடல்கள் மற்றும் நடனங்கள் மேற்கொள்கிறார். அப்போது மைக்கேலின் ரசிகர்கள் லியோவை கொண்டாடும் விதம் மைக்கேல் ஜாக்சனைக் கொண்டாடியதைப் போன்றே இருக்கிறதாம். இருப்பினும் லியோவின் பெற்றோருக்கு இப்படி தன் மகன் நடந்து கொள்வதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

Trending News