கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் பாடாய் படுகிறீர்களா? இந்த வீட்டு வைத்தியம் போதும்

High Cholesterol: கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பல உணவுப் பொருட்கள் உள்ளன. ஆனால் இந்த கெட்ட கொழுப்பைக் குறைக்கும் சில சமையலறை மசாலாப் பொருட்களும் பயன் தரும் என்று உங்களுக்கு தெரியுமா??

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 2, 2024, 02:40 PM IST
  • அதிக கொலஸ்ட்ராலை குறைக்கும் மசாலா பொருட்கள்.
  • இலவங்கப்பட்டை இதய பிரச்சனையை போக்க நன்மை பயக்கும்.
  • மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் பாடாய் படுகிறீர்களா? இந்த வீட்டு வைத்தியம் போதும் title=

Cholesterol Control: நமது உணவை சுவையாக்க பல மசாலாப் பொருட்களை நாம் உணவில் சேர்த்து வருகிறோம். ஆனால் இந்த மசாலாப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நல்ல பலனைத் தரும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைக் குறைக்க நமது சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்கள் பயன்படும். அப்படி அதிக கொலஸ்ட்ரால் பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக இரத்த நாளங்கள் தடுக்கப்பட ஆரம்பிக்கின்றன மற்றும் இரத்தம் உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கு சரியாக சென்றடையாமல் போய்விடும். இத்தகைய சூழ்நிலையில், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க சில மசாலாப் பொருட்களை நாம் நமது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த மசாலாப் பொருட்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். குறிப்பாக நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும். எனவே அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையை நீக்க எந்தெந்த மசாலாப் பொருட்களை உட்கொள்ளலாம் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

அதிக கொலஸ்ட்ராலை குறைக்கும் மசாலா பொருட்கள் | Spices To Reduce High Cholesterol:

இலவங்கப்பட்டை | Cinnamon:
இலவங்கப்பட்டை சாப்பிடுவது இதய பிரச்சனையை போக்க நன்மை பயக்கும். இலவங்கப்பட்டை இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் உட்புற அடைப்புகளை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் இலவங்கப்பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது இன்சுலின் உற்பத்தியையும் ஆதரிக்கிறது. எனவே இரத்தக் கொழுப்பைக் குறைக்க, இலவங்கப்பட்டை டீயை குடிக்கலாம் அல்லது வெவ்வேறு உணவுப் பொருட்களில் சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க | Aloe Vera Benefits: கோடைகாலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்போ இதை மட்டும் பண்ணுங்க

மஞ்சள் | Turmeric:
ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள், ஆயுர்வேதத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடலுக்கு ஒன்றல்ல பல நன்மைகள் கிடைக்கும். மஞ்சளில் காணப்படும் முக்கிய வேதி பொருளில் குர்குமின் குறிப்பிடததகுந்த ஒன்று. அதே நேரத்தில், மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு நல்ல மூலமாகும். மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டால் கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம். 

வெந்தய விதைகள் | Fenugreek Seeds:
வெந்தய விதைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும் மசாலா பொருட்களில் ஒன்றாகும். இந்த தானியத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை இருக்கிறது. அதுமட்டுமின்றி வெந்தய விதை உட்கொள்வதால் உடலில் இருக்கும் நச்சை நீக்க உதவும். இந்த தானியங்களை உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் குறைக்கும். எனவே நீங்கள் வெந்தயத்தை தேநீர் வடிவில் தயாரித்து குடிக்கலாம் அல்லது வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்தும் சாப்பிடலாம்.

ஓமம் | Ajwain:
ஓமத்தை உட்கொள்வதாலும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த விதை நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் இந்த சிறிய விதையில் நல்ல அளவு கொழுப்பு அமிலங்கள் மற்றும் உணவு நார்ச்சத்தும் காணப்படுகின்றன.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Carrom seeds benefits for hair : என்ன பண்ணாலும் முடி கொட்டுதா? அப்போ உங்க ஹேர் ஆயிலில் இதை கலந்து தடவவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News