குரு பெயர்ச்சி; இந்த 4 ராசிக்காரர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்

 கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண லாபம் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2021, 09:40 AM IST
குரு பெயர்ச்சி; இந்த 4 ராசிக்காரர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் title=

ஜோதிடத்தை பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற நிகழ்வுகளின் போது தன்னுடைய ராசிக்கான பலனை மிகவும் கவனிக்கின்றனர்.

அதன்படி குரு பகவான் பெயர்ச்சி (Guru Peyarchi) பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2 ஆம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3 ஆம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தரும் கிரகம் வியாழன். எனவே அதன் மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அற்புதமாக இருக்கும். இந்த 4 ராசிக்காரர்களுக்கு வியாழன் ராசி மாற்றம் தொழிலில் அபரிமிதமான முன்னேற்றத்தைத் தரும்.

ALSO READ | குரு பெயர்ச்சி கொட்டும் மழையில் ஆலங்குடி குருபகவானை தரிசித்த பக்தர்கள்

இந்த 4 ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள்

மேஷம்: குருபகவான் கும்ப ராசியில் நுழைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு பெறலாம். பணம் சாதகமாக இருக்கும். இதுவரை தடைப்பட்ட வேலைகள் எளிதாக முடியும். மொத்தத்தில் இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கும் வியாழன் ராசி மாற்றம் மிகவும் சாதகமாகும். பணத் தட்டுப்பாடு முடிவுக்கு வரும். போதிய அளவு பணம் கையில் கிடைத்து நிம்மதி அடைவீர்கள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண லாபம் கிடைக்கும். பதவி உயர்வு, மரியாதை பெறலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். முதலீடு செய்வதற்கு இது சிறந்த நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடு நல்ல பலனைத் தரும்.

மகரம்: மகரம் ராசிக்காரர்கள் பணவரவால் ஆதாயம் அடைவார்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். முதலீடுகள் மற்றும் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுங்கள். தடைபட்ட வேலைகளில் வெற்றி பெறுவீர்கள்.

ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News