26 வயது இளைஞரின் உயிரைப் பறித்த யூட்யூப் வைத்தியம்..!.

இறந்தவரின் தந்தை நுனுசந்த் மஹ்தோ, தனது மகன் பல்வலிக்கு சிகிச்சையளிப்பதற்காக யூடியூப் வீடியோக்களைப் பார்த்து அரளி விதைகளை உட்கொண்டதாக  தெரிவித்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 18, 2023, 02:07 PM IST
  • யூடியூப் வீடியோக்களில் இருந்து இந்த வைத்தியங்களைப் பின்பற்றினார்.
  • போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதாகவும் அவரது தந்தை தெரிவித்தார்.
  • ஒரு வாரத்திற்கு முன்பு அவருக்கு கடுமையான பல்வலி ஏற்பட்டது.
26 வயது இளைஞரின் உயிரைப் பறித்த யூட்யூப் வைத்தியம்..!. title=

சமூக ஊடகங்கள் நமது வாழ்க்கையை மாற்றும் திறனை கொண்டவை. ஆனால் அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தாத போது அது ஆபத்தான தாக்கங்களை ஏற்படுத்தும், பல்வலிக்கான வீட்டு வைத்தியத்தைப் பின்பற்றி தனது உயிரை இழந்த ஜார்க்கண்டின் அஜய் மஹ்தோவுக்கும் இதே போன்ற ஒன்று நடந்தது. 26 வயதான மஹ்தோ, கடுமையான பல் வலியில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்த பரிந்துரைகள் தொடர்பான யூடியூப் வீடியோக்களைப் பார்த்த பிறகு, அதிகப்படியான அரளி விதைகளை உட்கொண்டதால் பரிதாபமாக இறந்தார்.

மஹ்தோ யூடியூப் வீடியோக்களில் இருந்து இந்த வைத்தியங்களைப் பின்பற்றினார். அதில் கூறியுள்ள படி ஏராளமான அரளி விதைகளை உட்கொண்டார். விரைவில் அவரது உடல் நிலை மோசமடைந்தது. பின்னர், ஹசாரிபாக்கில் உள்ள பிஷ்னுகர் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அந்த நபர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இறந்தவரின் தந்தை நுனுசந்த் மஹ்தோ, தனது மகன் பல்வலிக்கு சிகிச்சையளிப்பதற்காக யூடியூப் வீடியோக்களைப் பார்த்து அரளி விதைகளை உட்கொண்டதாக  தெரிவித்துள்ளார்.

ஹசாரிபாக் முஃபாசில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நுதன் நகர் காலனியில் உள்ள ஒரு லாட்ஜில் மஹ்தோ தங்கியிருந்ததாகவும், அங்கு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதாகவும் அவரது தந்தை தெரிவித்தார். ஒரு வாரத்திற்கு முன்பு அவருக்கு கடுமையான பல்வலி ஏற்பட்டது. நுனுசந்த் தனது மகன் கடின உழைப்பாளி என்றும், சிபிஎஸ்இ நடத்தும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் சிறந்து விளங்கினார் என்றும் கூறினார்.

அவர் பல யூடியூப் வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு, மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்குப் பதிலாக அரளி விதைகளை உட்கொண்டார். ஹசாரிபாக் சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.பி. சிங் கூறுகையில், அதிகப்படியான அரளி விதைகள் மிகவும் ஆபத்தானவை மற்றும் உயிருக்கு ஆபத்தானவை.

பீகாரில் இருந்து பதிவான மற்றொரு சம்பவத்தில், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், 25 வயது இளைஞன் ஒரு மோமோ சாப்பிடும் உணவு சவாலில் 1,000 ரூபாய்க்கு பந்தயம் கட்டியதில் 150 மோமோக்களை சாப்பிட்டு இறந்தார். பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள கியானி மோர் என்ற இடத்தில் உள்ள ஒரு மோமோ ஸ்டாலில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மேலும் படிக்க | தொப்பையை கரைக்கணுமா.. இந்த ‘7’ விதிகளை கடைபிடியுங்க.... அதுவே போதும்!

இறந்த விபின் குமார் அதிகபட்சமாக யார் மோமோக்களை சாப்பிடலாம் என்று நண்பர்களிடையே ரூ 1,000 பந்தயம் கட்ட ஒப்புக்கொண்டார், பின்னர் அவர் 150 மோமோஸ் சாப்பிட்ட பிறகு மயங்கி தரையில் விழுந்தார். முதலில், அவரது நண்பர்கள் அவர் நடிப்பதாக  நினைத்தார்கள், ஆனால் பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ஆர்வ கோளறுல வெந்நீர் அதிகம் குடிக்காதீங்க... கிட்னி காலியாகிவிடும்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News