VIDEO: வழியில் நோய்வாய்ப்பட்ட பெண்ணுக்கு உதவிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

நோய்வாய்ப்பட்ட ஒரு பெண்ணுக்கு உதவியதன் மூலம் மக்களின் இதயங்களை வென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 22, 2019, 07:11 PM IST
VIDEO: வழியில் நோய்வாய்ப்பட்ட பெண்ணுக்கு உதவிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி title=

அமேதி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று (சனிக்கிழமை) அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் நோய்வாய்ப்பட்ட ஒரு பெண்ணுக்கு உதவியதன் மூலம் மக்களின் இதயங்களை வென்றுள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த வந்த அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், இன்று அமேதி தொகுதிக்கு கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்துடன் சென்ற ஸ்மிரிதி இரானி மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அப்பொழுது பரோலியா கிராமத்து மக்களை சந்தித்து விட்டு வரும் வழியில், சாலை ஓரத்தில் ஒரு பெண் நோயுற்ற நிலையில் தள்ளு வண்டியில் செல்வதைக் கண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது காரில் இருந்து இறங்கி வந்து, அந்த நோயாளியை பெண்ணை, அரசு ஆம்புலன்ஸ் மூலம் கோரிகஞ் மாவட்ட மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை மிகவும் நெகிழ்ச்சி அடையச்செய்தது

 

 

Trending News