Video: மெட்ரோ ரயில் கதவில் மாட்டிய ஆடை... பிளாட்பார்மில் இழுத்து செல்லப்பட்ட பெண்

மும்பை: மும்பை மெட்ரோ ரயிலின் மூடிய கதவுகளில் பெண்ணின் ஆடை சிக்கியதால், ரயில் அவரை இழுத்து சென்ற பயங்கர சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 2, 2023, 03:52 PM IST
Video: மெட்ரோ ரயில் கதவில் மாட்டிய ஆடை... பிளாட்பார்மில் இழுத்து செல்லப்பட்ட பெண் title=

மும்பை: மும்பை மெட்ரோ ரயிலின் மூடிய கதவுகளில் பெண்ணின் ஆடை சிக்கியதால், ரயில் அவரை இழுத்து சென்ற பயங்கர சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் ரயில் அவரை நடைமேடையின் நுனிக்கு இழுத்துச் சென்ற பயங்கர சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாலை 4.10 மணியளவில் சாகலா ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் பெட்டியின் கதவுகளுக்கு இடையே ஆடை சிக்கிய நிலையில் பெண் ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வதை வைரலான வீடியோவில் காணலாம். அருகில் நின்றிருந்த பயணி ஒருவர் காப்பாற்ற முயன்ற நிலையில், அது பலனளிக்காமல், அந்த பெண் ரயிலுடன் இழுத்துச் செல்லப்பட்டார்.

ரயில் வேகம் வேகம் அதிகரித்து, அந்த பெண்ணை பிளாட்பாரத்தின் தண்டவாளத்தின் முனைக்கு இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர், ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த வீடியோவில், பயணிகளை காப்பாற்றவோ அல்லது ரயில் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட சொல்லி தகவல் கொடுக்கவோ, ரயிலை நிறுத்தவோ ஸ்டேஷனில் காவலர்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

மேலும் படிக்க | பேனா வைக்க நிதி இருக்கு ஊதியம் கொடுக்க நிதி இல்லையா?... டிடிவி தினகரன் கேள்வி 

வைரலாகி வரும் பயங்கர வீடியோவை கீழே காணலாம்:

 

 

காயம் அடைந்த பெண் கவுரி குமாரி சாஹு என அடையாளம் காணப்பட்டார், அவர் அந்தேரியில் உள்ள செவன் ஹில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மருத்துவ செலவுகளை மும்பை மெட்ரோ ஒன் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. இதற்கிடையில், சாஹு மெட்ரோ ஒன் நிறுவனத்திற்கு எதிராக சாகலா காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளார் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை விளக்கி தான் படுகாயம் அடைய காரணமான மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க | மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு 

மேலும் படிக்க | மதவாத சக்திகளுக்கு இடம் அளிக்கக்கூடாது - முதலமைச்சரின் புத்தாண்டு வாழ்த்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News