கடுமையான வெயில் காரணமாக பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை!

டெல்லியில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக கோடை விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 30, 2019, 04:11 PM IST
கடுமையான வெயில் காரணமாக பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை! title=

டெல்லியில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக கோடை விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களில் ஆங்காங்கே அவ்வப்போது மழை எட்டிப்பார்த்து செல்லும் வேலையில், வட மாநிலங்களில் இதுவரையிலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடு இல்லை. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் வாட்டி வதக்கும் வெயிலின் தாக்கத்தை உணர்ந்து 8 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி வரும் ஜூலை 8-ஆம் நாள் வரும் 8 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து துணை முதல்வர் மனிஷ் சிஷ்சோடியா தெரிவிக்கையில்., "டெல்லியில் நிலவும் கடுமையான வெயிலை கருத்தில் கொண்டு 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வரும் ஜூலை 8-ஆம் நாள் வரை நீட்டிக்கப்படுகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட படி குறிக்கப்பட்ட நாளில் வகுப்புகள் தொடங்கும்" என தெரிவித்துள்ளார்.

மாநில கல்வி துறை அமைச்சரான மனிஷ் சிஷ்சோடியா., இந்த விடுப்பு அறிவிப்பு ஆனது தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் இருதரப்புக்கும் பொருந்தும் என தெளிவுபடுத்தியுள்ளார். 

Trending News