EVM இயந்திரங்களை குறைசொல்வதும், அதன்மீது பழிபோடுவதும் ட்ரண்ட் ஆகி விட்டது: மோடி

ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மின்னணு வாக்கு இயந்திரங்களை பற்றியும் எடுத்துரைத்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 26, 2019, 04:42 PM IST
EVM இயந்திரங்களை குறைசொல்வதும், அதன்மீது பழிபோடுவதும் ட்ரண்ட் ஆகி விட்டது: மோடி title=

புதுடில்லி: காங்கிரஸ் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளுக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்களை பற்றி சந்தேகம் எழுப்புவது என்பது ஏற்பட்டிருக்கும் ஒரு நோய் ஆகும் என பிரதமர் மோடி விளாசி உள்ளார்.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை குறை சொல்வதும், அதன் மீது பழி போடுவதும் தற்போதைய ட்ரண்ட் ஆகி விட்டது. மின்னணு ஓட்டு இயந்திரங்களை பற்றி சந்தேகம் எழுப்புவது என்பது எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு நோய் ஆகும். ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்ற தேர்தல் கமிஷனின் சவாலை ஏற்க மறுக்கிறது காங்கிரஸ். தேர்தல் செயல்முறை கணிசமாக முன்னேறியுள்ளது. மேம்பாடுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. முதலில் தேர்தல் நடக்கும் போது ஒரு தலைப்பு இருந்தது, தேர்தலின் போது எவ்வளவு வன்முறை நடந்தது என்று, ஆனால் இன்றைய தலைப்பு என்னவென்றால், முந்தையதை தேர்தலை விட இந்த தேர்தலில் எவ்வளவு வாக்களிக்கப்பட்டு என்ற ஒப்பிடும் தான் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் தங்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு முதல் எங்கள் வெற்றியும் அவர்களின் தோல்வியையும் காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை.

ஈ.வி.எம் பற்றிய விவாதம் 1977 இல் தொடங்கியது, முதலில் 1982 இல் பயன்படுத்தப்பட்டது என்று பிரதமர் மோடி கூறினார். 1988 ஆம் ஆண்டில், அதற்கு சட்ட அனுமதி வழங்கப்பட்டது 1992 இல் காங்கிரஸ் தலைவர்கள் தான் மின்னணு ஓட்டு இயந்திரங்களுக்கான விதிகளை உருவாக்கினர். இன்று காங்கிரஸ் வெற்றியை இழந்திருப்பதால் ஈ.வி.எம் இயந்திரத்தை குறை கூறுகிறார்கள் எனக் கூறினார்.

Trending News