பெரிய சர்ச்சை! பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர்... ஷாக் வீடியோ

Lok Sabha Election 2024: வைரலாகி வரும் வீடியோவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞர் பாஜகவுக்கு 8 முறை வாக்குளிப்பதை பார்க்க முடிகிறது. இது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 20, 2024, 03:34 PM IST
  • காங்கிரஸ் கட்சி இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
  • அகிலேஷ் யாதவும் இதுகுறித்த தனது ஆதங்கத்தை பதிவிட்டிருந்தார்.
  • தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள கோரிக்கை.
பெரிய சர்ச்சை! பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர்... ஷாக் வீடியோ title=

Lok Sabha Election 2024: 18ஆவது மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் இதுவரை நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நாளை (மே 20) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது எனலாம்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய தென் மாநிலங்கள் அனைத்திற்கும் கடந்த நான்கு கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. மகாராஷ்டிராவிலும் நாளை நடைபெறும் ஐந்தாவது கட்ட தேர்தலுடன் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைகிறது எனலாம். இனி வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களேயே மீதம் உள்ள கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் எனலாம்.

வாக்கு இயந்திரம் குறித்த சந்தேகங்கள்...

குறிப்பாக, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கும், அசாம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு அடுத்தடுத்த கட்டங்கள் நடைபெற இருக்கிறது. நாளை ஐந்தாம் கட்டம் வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில், மே 25ஆம் தேதி ஆறாம் கட்ட வாக்குபதிவும், ஜூன் 1ஆம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். அந்த வகையில், தற்போது மக்களவை தேர்தல் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது எனலாம்.

மேலும் படிக்க | மக்களவை தேர்தல் 2024... 5ம் கட்ட வாக்குபதிவு... தொகுதிகள்... முக்கிய வேட்பாளர்கள் விபரம்..!

ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல விவகாரங்கள் தேர்தல் களத்தில் பரபரப்பை உண்டாக்கும் நிலையில், வாக்குச் செலுத்தும் இயந்திரம் மீதும், தேர்தல் ஆணையம் மீதும் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து மட்டுமின்றி நடுநிலைவாதிகளிடம் இருந்து கூட இத்தகைய கருத்துகளை காண முடிகிறது.

வைரலாகும் வீடியோ

வாக்கு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தின் ஒப்புகைச் சீட்டை 100% எண்ண வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும் தேர்தல் ஆணையத்திற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது. இருப்பினும், வாக்கு இயந்திரம் மீதான கேள்விகள் தொடர்ந்து எழுந்துகொண்டேதான் இருக்கின்றன. 

அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோவில் ஒரு இளைஞர் பாஜகவுக்கு எட்டு முறை வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் ஃபரூக்காபாத் மக்களவைத் தொகுதியில் கடந்த மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில்தான் இந்த முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  

எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

குறித்த கவலைகளை எழுப்பி, மீண்டும் மீண்டும் வாக்களிக்கும்போது, அந்த நபர் தன்னைப் பதிவு செய்துகொள்வதை வீடியோ படம்பிடிக்கிறது. மே 13 அன்று ஃபரூக்காபாத் தொகுதிக்கு வாக்குப்பதிவின் போது இந்த சம்பவம் நடந்தது. வைரலான அந்த வீடியோவில் ஒரு இளைஞர் பல முறை பாஜகவின் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பதை காண முடிகிறது. அவர் ஒரே வாக்குச்சாவடியில் இப்படி வாக்களித்தாரா அல்லது வேறு வேறு வாக்குச்சாவடியில் வாக்களித்தாரா என்பது குறித்து சரிவர தெரியவில்லை. 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் தங்களின் X தளத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், உடனடியாக தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

அகிலேஷ் யாதவ் அவரது பதிவில்,"இது தவறு என்று தேர்தல் ஆணையம் கருதினால், நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில்... பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டிதான்" என தனது ஆதங்கத்தை குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி அதன் பதிவில்,"தேர்தல் ஆணையர் அவர்களே, ஒரு இளைஞர் எட்டு முறை வாக்களித்துள்ளான்... இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளது. அந்த வீடியோவும் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | 'எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம்' - இந்தியா கூட்டணி அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News