RBI Monetary Policy: ரெப்போ விகிதங்களில் மாற்றம் இல்லை, 4% விகிதம் தொடரும்

RBI Monetary Policy: கொந்தளிப்பான பொருளாதார சூழலில் இருந்து ரிசர்வ் வங்கி வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 8, 2022, 11:39 AM IST
  • ரிசர்வ் வங்கி தனது இணக்கமான நிலைப்பாட்டை தொடர்கிறது.
  • ரெப்போ விகிதங்களில் மாற்றம் இல்லை.
  • 4% ஆக தொடர்கிறது.
RBI Monetary Policy: ரெப்போ விகிதங்களில் மாற்றம் இல்லை, 4% விகிதம் தொடரும் title=

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணயக் கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டது. ரிசர்வ் வங்கி பாலிசி விகிதங்களை மாற்றாமல் 4 சதவீதமாக வைத்துள்ளது. கொந்தளிப்பான பொருளாதார சூழலில் இருந்து ரிசர்வ் வங்கி வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய போர் சூழல் காரணமாக, நாம் புதிய மற்றும் மகத்தான தடைகளை எதிர்கொண்டுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்தின் மோதல் உலகப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சாத்தியம் உள்ளது என்று அவர் கூறினார்.

ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான, இந்திய ரிசர்வ் வங்கி-யின் (ஆர்பிஐ) ஆறு பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி), ரெப்போ விகிதத்தை 4% ஆக வைத்திருக்க ஒருமனதாக முடிவு செய்தது. எம்பிசி கமிட்டி ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 3.35 சதவீதமாக வைத்துள்ளது. உலகப் பொருளாதாரம் ஒரு மாபெரும் மாற்றத்துக்கு உட்பட்டுள்ளது என்று ஆளுநர் தாஸ் கூறினார்.

ரெப்போ என்பது வணிக வங்கிகளுக்கு தேவைப்படும் போது ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் விகிதமாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி பயன்படுத்தும் ஒரு கருவி இது. ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் இருந்து பெறும் கடன் விகிதமாகும்.

"பெரிய அந்நிய செலாவணி இருப்புக்கள், வெளிப்புற குறிகாட்டிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் வங்கித் துறை வலுப்படுத்துதல் போன்ற வலுவான இடையகங்கள் கடந்த சில ஆண்டுகளில் எங்களுக்கு உறுதியளித்துள்ளன. ரிசர்வ் வங்கியில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். தற்போதைய புதைகுழியில் இருந்து பொருளாதாரத்தை மீட்டு கொண்டு வர தயாராக இருக்கிறோம்,” என்று தாஸ் கூறினார்.

மேலும் படிக்க | வங்கியில் நமது தகவல்கள் திருடப்பட்டதா? அதிர்ச்சி தகவல்! 

ஓமிக்ரானின் தீவிரம் குறைந்தாலும், அதற்கு பதிலான புவிசார் அரசியல் நிலை புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. பணப்புழக்கத்தை சரிசெய்யும் வழிமுறைக்கு அடித்தளமாக செயல்படும் நிலையான வைப்பு வசதியை அறிமுகப்படுத்த வேண்டும். உலகளாவிய பணவீக்க கணிப்புகள் அதிகரித்துள்ளன. பிராந்தியங்கள் முழுவதும் உலகளாவிய உற்பத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தின் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. விலை அழுத்தங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகள் ஆகியவை நீடிக்க வாய்ப்புள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.

வங்கி விகிதங்களில், எம்எஸ்எஃப் மற்றும் வங்கி விகிதங்களும் நிலையாக இருப்பதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

மோசடி-யைத் தடுக்கும் வகையில், அனைத்து வங்கிக் கிளைகளிலும், ஏடிஎம்களிலும் UPI மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்தார். அத்தகைய ஆபரேட்டர்களுக்கு பணம் செலுத்தும் முறைகளைப் பாதுகாக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்படுமென்றும் தெரிவித்தார் அவர். 

மேலும் படிக்க | FD பற்றிய முக்கிய விதிகளை மாற்றியது RBI: தெரியாமல் போனால் நஷ்டம் உங்களுக்கு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News