பி.எப் இணையதளம் ஹக்: 2.7 கோடி நபரின் தகவல் திருட்டு!

நிறுவன ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (PF) இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது! 

Last Updated : May 3, 2018, 11:57 AM IST
பி.எப் இணையதளம் ஹக்: 2.7 கோடி நபரின் தகவல் திருட்டு!  title=

நிறுவன ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (PF) இணையதளம் ஹேக் செய்யப்பட்டுளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், சுமார் 2.7 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆதார் எண்ணை, பி.எஃப் கணக்குடன் இணைக்கும் சேவைக்காக துவங்கப்பட்ட இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த ஹேக்-கால் எத்தனை நபர்களின் தகவல்கள் திருடப்பட்டன என தெரியாத நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இது போன்று ஆபத்தான நிலையில் இருக்கும் இணையதளங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க அவர் அந்த கடித்ததில் வலியுறுத்தியுள்ளார்.  

இந்த தகவல் திருட்டால் சுமார் 2.7 கோடி பேரின் பெயர், முகவரி, மற்றும் பணி விவரங்கள் ஆகிய தகவல்கள் திருடப்பட்ட வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Trending News