பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளிய மும்பை... ஆசியாவின் கோடீஸ்வர நகரப் பட்டியலில் முதலிடம்!

சர்வதேச அளவில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலை ஹூருன் குளோபல் ரீச் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும். இந்த ஆண்டிற்கான பட்டியலில், மும்பை, சீன தலைநகர் வெஜின்கை பின்னுக்குத் தள்ளி, ஆசியாவின் கோடீஸ்வர நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 26, 2024, 05:19 PM IST
பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளிய மும்பை... ஆசியாவின் கோடீஸ்வர நகரப் பட்டியலில் முதலிடம்! title=

சர்வதேச அளவில் உள்ள கோடீஸ்வரர்கள்  பட்டியலை ஹூருன் குளோபல் ரீச் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும். இந்த ஆண்டிற்கான பட்டியலில், இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பை, சீன தலைநகர் வெஜின்கை பின்னுக்குத் தள்ளி, ஆசியாவின் கோடீஸ்வர நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது.

உலகில் வேகமாக வளர்ந்து வரும், கோடீஸ்வரர்களின் தலைநகரமாக மும்பை விளங்குகிறது என்றும், இந்த ஆண்டில் நகரத்தில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் 26 பேர் கூடுதலாக இணைந்துள்ளனர் என்றும் ஹூருன் குளோபல் ரீச் பட்டியல் தெரிவிக்கிறது.

புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கிய மும்பை

சீன தலைநகர் பைஜங்கில் 91 கோடீஸ்வரர்கள் உள்ள நிலையில், மும்பை நகரத்தில் 92 கோடீஸ்வரர்கள் உள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் மும்பையில், 26 புதிய கோடீஸ்வரர்கள் உருவாக்கியுள்ளனர். அதே நேரத்தில், பெய்ஜிங் நகரம் (China), 18 கோடீஸ்வரர்களை இழந்துள்ளது. இதனில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் கோடீஸ்வரர்கள் அடங்கிய நகரமாக மும்பை உருவாகியுள்ளது.

உலக பட்டியலில் மூன்றாவது இடத்தில் மும்பை

ஆசியாவின் கோடீஸ்வர நகரப் பட்டியில் முதலிடத்திலும், உலக கோடீஸ்வர நகரங்கள் பட்டியலில் மும்பை மூன்றாவது இடத்திலும் உள்ளது. தேசிய தலைநகர் தில்லி, முதல் முதலாக பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பையின் பெரும் கோடீஸ்வரர்கள்

முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்களால் ஆற்றல் மற்றும் மருந்துத் துறைகள் உட்பட பல துறைகளில் மும்பை மிக வேகமாக முன்னேறி வருகிறது. முகேஷ் அம்பானி உலக அளவில் தனது வலுவான நிலையை தக்க வைத்துக் கொண்டு 10வது இடத்தில் உள்ளார்.  இதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வெற்றியே காரணம். கௌதம் அதானி 8 இடங்கள் முன்னேறி 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மும்பையின் கோடீஸ்வரர்கள் மத்தியில், ரியல் எஸ்டேட் அதிபர் மங்கள் பிரபாத் லோதா மற்றும் குடும்பத்தினர் சொத்து 116% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைமை பொறுப்பேற்கும் IIT சென்னை முன்னாள் மாணவர்!

சொத்து மதிப்பில் ஏற்றம் கண்ட சில கோடீஸ்வரர்கள்

சன் பார்மாசூட்டிகல்ஸின் திலீப் ஷாங்வி மற்றும் குமார் மங்கலம் பிர்லா ஆகியோரும் கோடீஸ்வரர்களாக உயர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளனர். HCL  நிறுவனத்தின் ஷிவ் நாடார் மற்றும் குடும்பத்தினர் சொத்து மதிப்பு, உலகளாவிய தரவரிசையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் கண்டது. இந்நிறுவனம் 16 இடங்கள் முன்னேறி 34 வது இடத்தைப் பிடித்தது. எனினும் இதற்கு நேர்மாறாக, சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் எஸ் பூனவல்லா ஒன்பது இடங்கள் சரிந்து 55 வது இடத்திற்குச் சென்றுவிட்டார். இவர் மொத்த சொத்து மதிப்பு $82 பில்லியன்.

சர்வதேச அளவில் முதலிடம் வகிக்கும் நியூயார்க் நகரம்

சர்வதேச அளவிலான பட்டியலில், பெரும் பணக்காரர்களை கொண்ட நகரமாக முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, 97 பெரும் பணக்காரர்களுடன், லண்டன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பெரும் பணக்காரர்களின் உலக பட்டியல்

பெரும் பணக்காரர்களின் பெயர்களை கொண்ட உலக பட்டியலில், உலகில் 3279 கோடீஸ்வரர்கள் உள்ளனர் என்றும், இதில் 167 பேர், இந்த வருடம் பட்டியலில் இணைந்த புதிய நபர்கள் என்றும் கூறப்படுகிறது. புதிதாக இணைந்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர்கள். நியூயார்க் நகரத்தில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில், 109 பேர் புதிதாக இணைந்தவர்கள். 800 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடத்தில் உள்ளது.

மேலும் படிக்க | மனித மூளையில் சிப்... எண்ணங்களால் கணிணி மவுஸை இயக்கும் பக்கவாத நோயாளி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News