அமேதியில் ராகுல் காந்தி போட்டி.... இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு

Lok Sabha Elections: ராகுல் காந்தி எளிமையான முறையில் வேட்புமனு தாக்கல் செய்வார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் வேட்புமனு  தாக்கல் செய்யும்போது, காந்தி குடும்பத்தினர் மற்றும் பிற மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அவருடன் இருப்பார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 2, 2024, 05:23 PM IST
  • ராகுல் எளிமையான முறையில் வேட்புமனு தாக்கல் செய்வார்.
  • காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சொன்ன தகவல்.
  • காங்கிரஸ் கட்சியினருக்கு அறிவுரைகள்.
அமேதியில் ராகுல் காந்தி போட்டி.... இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு title=

புதுடெல்லி: அமேதி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற கேள்வி அமேதியில் மட்டுமல்லாமல் நாடு முழுதும் இருந்த நிலையில், இம்முறையும் ராகுல் காந்திதான் அங்கிருந்து போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்து கொண்டனர். 

மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவில் மே 20ம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. மே 3 ஆம் தேதி 5 ஆம் கட்டத்திற்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாகும். மே 3ம் தேதி, அதாவது நாளை மதியம் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்வார் என கூறப்படுகின்றது.

ராகுல் எளிமையான முறையில் வேட்புமனு தாக்கல் செய்வார்

ராகுல் காந்தி எளிமையான முறையில் வேட்புமனு தாக்கல் செய்வார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் வேட்புமனு  தாக்கல் செய்யும்போது, காந்தி குடும்பத்தினர் மற்றும் பிற மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அவருடன் இருப்பார்கள். டெல்லியில் இருந்து வழக்கறிஞர்கள் குழு ஒன்று அமேதி சென்றடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சொன்ன தகவல்

அமேதியில் நாளை (மே 3, 2024) மதியம் 12:00 மணிக்கு ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்வார் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அனில் சிங் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. இந்த முறை ராகுல் காந்தி இங்கிருந்து சாதனை அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அனில் கூறினார்.

மேலும் படிக்க | ஆந்திராவில் போலீஸ் சோதனையில் 2000 கோடி பணத்துடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்!

காங்கிரஸ் கட்சியினருக்கு அறிவுரைகள்

அமேதியில் பல ஹோட்டல்களின் முன்பதிவும் செய்யப்பட்டுள்ளது. மே 1 ஆம் தேதி, சோனியா காந்தியின் பிரதிநிதி கே.எல்.சர்மாவும் அமேதிக்கு வந்து முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியினருடன் கே.எல்.சர்மா ஆலோசனை நடத்தினார். பின்னர் மே 3-ம் தேதி ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வுக்குத் தயாராகுமாறு அவர் தொண்டர்களிடம் கூறினார்.

முன்னதாக, அமேதியில் போட்டியிட ராகுல் சற்று தயக்கம் காட்டினார். எனினும், பிரியங்கா காந்தி வதேராவோ அல்லது ராகுல் காந்தியோ இந்த தொகுதியில் போட்டியிட்டால், அது, மாநிலத்தில் கட்சியில் பிடிப்பை மேம்படுத்தும் முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று உள்ளூர் தொண்டர்கள் கட்சித் தலைவரிடம் தெரிவித்திருந்தனர்.

2019 மக்களவைத் தேர்தலில் காந்தி தோல்வியடைந்தார்

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் ராகுலை சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். எனினும், அந்தத் தேர்தலில் வயநாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இந்த முறையும் அமேதி தொகுதியில் பலமான போட்டி எதிர்பார்க்கப்படுகின்றது. 

ரேபரேலி தொகுதியில் ராகுல்-பிரியங்கா காந்தியின் தாயார் சோனியா காந்தி போட்டியிட்டார். இருப்பினும், சோனியா காந்தி மக்களவைத் தேர்தல் போட்டியில் இருந்து விலகி மாநிலங்களவை உறுப்பினரானார்.

மேலும் படிக்க | NEET 2024 Admit Card | இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News