லோக்சபா தேர்தல் 2024: நாடு முழுவதும் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! ராகுல் கொடுத்த மெசேஜ்

Lok Sabha Elections 2024 Second Phase Voting Begins, Rahul Gandhi : லோக்சபா 2024 தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கியிருக்கும் நிலையில், இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களிக்குமாறு ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 26, 2024, 08:09 AM IST
  • நாடு முழுவதும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு
  • இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு ராகுல்காந்தி வேண்டுகோள்
லோக்சபா தேர்தல் 2024: நாடு முழுவதும் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! ராகுல் கொடுத்த மெசேஜ் title=

லோக்சபா தேர்தல் 2024 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

18வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் இரண்டாம் கட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது. ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் நடைபெற்ற நிலையில் இன்று 13 மாநிலங்களில் 88 தொகுதகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், அசாம், பிகார், சத்தீஸ்கர், திரிபுரா, மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

மேலும் படிக்க | மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: மாநில வாரியான தொகுதிகளின் முழுப் பட்டியல்

கேரளாவில் வயநாடு தொகுதி வாக்குப்பதிவு

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு இன்று வாக்குபதிவு நடக்கிறது. அந்த தொகுதியில் ராகுல்காந்தி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாஜகவின் மாநில தலைவர் கே. சுரேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 

திருவனந்தபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சஷிதரூர் காங்கிரஸ் சார்பிலும், திரிச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில், 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக-வின் தேஜஸ்வி சூர்யா, முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி, டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ், மைசூரு அரச பரம்பரையைச் சேர்ந்த யதுவீர் வாடியார் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

 ராகுல்காந்தி வேண்டுகோள்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி நாட்டு மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அவர் விடுத்திருக்கும் வேண்டுகோளில், " நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அடுத்த அரசாங்கம் சில பில்லியனர்களின் ஆட்சியா அல்லது 140 கோடி இந்தியர்களின் ஆட்சியா என்பதை உங்கள் வாக்கு தீர்மானிக்கும். எனவே, இன்றே வீடுகளை விட்டு வெளியேறி 'அரசியலமைப்புச் சட்டத்தின் சிப்பாயாக' மாறி ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களியுங்கள். வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்." என்று கூறியுள்ளார். மேலும், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | 'மத ரீதியில் இட ஒதுக்கீடு வந்துவிடும்...' காங்கிரஸ் மீது யோகி மீண்டும் அட்டாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News