Lok Sabha Election 2024: மணிப்பூரில் ஒரே தொகுதிக்கு இரண்டு கட்டமாக தேர்தல்... காரணம் என்ன!

Lok Sabha election 2024: தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, 7 கட்டங்களாக நடைபெறும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 17, 2024, 03:26 PM IST
Lok Sabha Election 2024: மணிப்பூரில் ஒரே தொகுதிக்கு இரண்டு கட்டமாக தேர்தல்... காரணம் என்ன! title=

தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, 7 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி 102 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். இரண்டாம் கட்டமாக, ஏப்ரல் 26ம் தேதி 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். மூன்றாம் கட்டமாக, மே 7ம் தேதி 94 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெறும். மே 13ம் தேதி நடைபெறும் நான்காம் கட்டத் தேர்தலில் 96 மக்களவைத் தொகுதிகளுக்கும், மே 20ம் தேதி ஐந்தாம் கட்டமாக 49 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும். ஆறாவது கட்டமாக மே 25ம் தேதி 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். மக்களவை தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி 57 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இருப்பினும், தேர்தல் ஆணையம் முழு அட்டவணையை வெளியிட்டபோது, 543 தொகுதிகளுக்குப் பதிலாக, தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India) பட்டியலில் 544 தொகுதிகள் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் கூட்கையில், மணிப்பூரில் உள்ள ஒரு தொகுதிக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், இதனால், மொத்தம் உள்ள தொகுதிகள் 543க்கு பதிலாக 544ஆக வந்துள்ளது என்றார்.

மணிப்பூர் மக்களவைத் தொகுதி விபரம்

மணிப்பூர் இரண்டு மக்களவைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: முதல்லாவதாக உள் மணிப்பூர் தொகுதி, முதன்மையாக மெய்ட்டி பெரும்பான்மை உள்ள பள்ளத்தாக்கு பகுதிகளை உள்ளடக்கியது. இரண்டாவதாக், புறநகர் மணிப்பூர் தொகுதி, அட்டவணை பழங்குடியினர் அதிகம் உள்ள பகுதி. இதனால், வன்முறை சம்பவம் ஏதும் நடக்காமல் தடுக்க, புற நகர் மற்றும் உள் மணிப்பூர் தொகுதிகளில் இரு வேறு நாட்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது என தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

மேலும், “மணிப்பூரின் கள நிலைமையை ஆணையம் மதிப்பாய்வு செய்துள்ளது. மேலும், சமீபத்திய வன்முறை சம்பவங்களை அடுத்து, மணிப்பூரின் பல்வேறு தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட ஏராளமான வாக்காளர்கள், இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் இப்போது மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில் வசிக்கின்றனர். இதை அடுத்து, அவர்கள் வாக்களிக்க ஏதுவாக, சிறப்பு வாக்குச் சாவடிகளை முகாம்களிலோ அல்லது அதற்கு அருகிலோ அமைக்கப்பட வேண்டும் என்று ஆணையம் முடிவு செய்துள்ளது” என்றார்.

மேலும் படிக்க | Zee News கருத்துக்கணிப்பு: தமிழ்நாட்டில் யாருக்கு அதிக இடங்கள்...? பாஜகவுக்கு வாய்ப்பிருக்கா?

புற நகர் மணிப்பூரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள்

முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி, ஹீரோக், வாங்ஜிங் தெந்தா, கங்காபோக், வாப்காய், காக்சிங், ஹியாங்லாம், சுக்னூ, சண்டேல் (எஸ்டி), சைகுல் (எஸ்டி), காங்போக்பி, சைட்டு (எஸ்டி), ஹெங்லெப் (எஸ்டி), சுராசந்த்பூர் (எஸ்டி), சைகோட் (எஸ்டி) மற்றும் சிங்கத் சட்டமன்றப் பகுதிகள் (எஸ்டி), வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

மணிப்பூரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள்

ஜிரிபாம், தெங்னௌபால் (எஸ்டி), புங்யார் (எஸ்டி), உக்ருல் (எஸ்டி), சிங்கை (எஸ்டி), கரோங் (எஸ்டி), மாவோ (எஸ்டி), தடுபி (எஸ்டி), தமேய் (எஸ்டி), தமெங்லாங் (எஸ்டி), நுங்பா (எஸ்டி), திபைமுக் (எஸ்டி) மற்றும் தன்லோன் (எஸ்டி) ஆகி தொகுதிகளில் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வககுப்பதிவு நடைபெறும்.

மணிப்பூர் வன்முறை

வன்முறை காரணமாக மனிப்பூரில், சுமார் 23,000-25,000 வாக்காளர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மணிப்பூரில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 20.26 லட்சமாக உள்ளது. முந்தைய ஆண்டு மே 3 அன்று மாநிலத்தில் வெடித்த இன மோதல்களைத் தொடர்ந்து, குக்கிஸ் - ஜோமி மற்றும் மெய்டே சமூகங்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு இடையே பிளவுகள் தோன்றியுள்ளன. குக்கிஸ் - ஜோமி ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் வசிக்கும் மெய்டீ மக்கள், மாநிலத்தின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் உள்ள மெய்ட்டி-பெரும்பான்மை பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அதே சமயம் மெய்ட்டி பெரும்பான்மையான பகுதிகளில் குக்கி-ஜோமி மக்கள், அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் படிக்க | Zee News தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி vs ராகுல்... அரியணை ஏறப்போவது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News