கட்டுக்கட்டாக சிக்கிய ரூ. 25 கோடி... ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

Jharkhand ED Raid Latest News: ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் இருந்து சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேல் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 6, 2024, 01:44 PM IST
  • 9 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
  • தொடர்ந்து பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
  • எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
கட்டுக்கட்டாக சிக்கிய ரூ. 25 கோடி... ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை ரெய்டு! title=

Jharkhand ED Raid Latest News: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள அமைச்சர் ஒருவரின் உதவியாளர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை மேற்கொண்டது. மொத்தம் 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், அங்கு கணக்கில் வராத கோடிக்கணக்கான பணத்தை ரொக்கமாக கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சோதனைகள் அனைத்தும் ராஞ்சியில்தான் நடத்தப்பட்டுள்ளது. ஜார்க்காண்ட் அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஆலம்கிர் ஆலம் என்பவரின் உதவியாளரான சஞ்சிவ் லால் என்பவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த சோதனையில் சுமார் 20 கோடி ருபாய்க்கும் மேல் ரொக்கமாக சிக்கியதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் பணத்தை எண்ணும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

தொடரும் ரெய்டுகள்...

அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தொடர் சோதனையை நடத்தி வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித்துறையின் முன்னாள் தலைமை பொறியாளரான வீரேந்திர ராம் என்பவருக்கு சொந்தமான இடங்களில்தான் சோதனை நடத்தது. வீரேந்திர ராமை கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததும் இங்கு குறிப்பிடத்தக்ககது. 

மேலும் படிக்க | ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!

அரசியல் களத்தில் பரபரப்பு

ஜார்க்கண்டில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச் - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போதைய அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கோடி கோடியாக ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டிருப்பது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் ஜார்க்கண்ட் பாஜக செய்தித்தொடர்பாளர் பிரதுல் ஷா தியோ ஜார்க்கண்ட் அரசை இன்று கடுமையாக சாடினார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,"ஜார்க்கண்ட் அரசுக்கும், ஊழலுக்கும் உள்ள நீண்ட கதை எப்போது முடியும் என்றே தெரியவில்லை. சில நாள்களுக்கு முன்னர்தான், காங்கிரஸ் எம்.பி., ஒருவரின் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து சுமார் 300 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. முதலமைச்சருக்கு மிக வும் நெருக்கமான பங்கஜ் மிஸ்ரா என்பவருக்கு தொடர்புடையவரின் வீட்டில் 10 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. 

இப்போது அமைச்சர் ஆலம்கிர் ஆலம் அவர்களின் உதவியாளர் வீட்டில் இருந்து 25 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. உடனடியாக ஆலம்கிர் ஆலமை போலீசார் காவலில் எடுத்து அமலாக்கத்துறை கைப்பற்றிய பணத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையமும் இதுசார்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இதற்கு காங்கிரஸ் கட்சி, சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

குறிவைக்கும் அமலாக்கத்துறை

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் முக்கிய தலைவருமான ஹேமந்த் சோரனையும் அமலாக்கத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்தது. சுரங்க ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முதலமைச்சராக இருந்த போது ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை தனது விசாரணை வளையத்திற்கு கொண்டுவந்ததும், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அக்கட்சியின் சம்பாய் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார். 

மேலும் படிக்க | ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு, ஐஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விழுக்காடு விபரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News