நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு - FM நிர்மலா சீதாராமன்!

கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2021, 12:17 PM IST
நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு - FM நிர்மலா சீதாராமன்! title=

கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்..!

மக்களவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான (Union Budget 2021) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை குழுவினர் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அவரிடம் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக எடுத்துரைத்தனர். அதன்பின்னர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் (Nirmala sitharaman), இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் பாராளுமன்றத்திற்கு புறப்பட்டனர். முதலில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் (Digital Budget) செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது. 

ALSO READ | எந்த எதிர்பார்ப்பும் இல்லை; ஏமாற்றமடைய தயாராக இருக்கிறேன்: P சிதம்பரம் 

நிர்மலா சீதாராமனின் முக்கிய பட்ஜெட் அறிவிப்புகள்:- 

- ஆரம்ப, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரத் துறை சேவைகளுக்காக ஆதமனிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா திட்டத்தின்கீழ் அடுத்த ஆறு ஆண்டுகளில் 64,180 கோடி ரூபாய் இந்திய அரசால் செலவிடப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

- தூய்மை இந்தியா 2.0 நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும். அதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.41 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும்.

- கொரோனா வைரஸ் தடுப்பூசிக்காக 35,000 கோடி ரூபாய் இந்திய அரசால் ஒதுக்கப்படுகிறது.

- இந்த நிதியாண்டில் சுகாதாரம் மற்றும் உடல்நலம் சார்ந்த சேவைகளுக்காக 2.23 லட்சம் கோடி ரூபாய் செலவிட இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

- 2.87 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புறப் பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்படும். இது இந்திய அரசின் குடிநீர் வழங்கல் திட்டமாகும்.

- 2021-22ஆம் நிதி ஆண்டுக்கான இந்திய அரசின் மூலதன செலவினங்கள் அதிகரிக்கப்படுவதை நான் முன்மொழிகின்றேன். அதற்காக 5.54 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

- நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 11,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். ரூ.1.03 லட்சம் கோடியில் தமிழகத்தில் 35,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் வகையில் சாலை வசதிகளை ஏற்படுத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியார் வாகனம் 20 ஆண்டுகளும், வாடகைக்கு இயக்கப்படும் கமர்ஷியல் வாகனங்கள 15 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் மாசுபாட்டை தவிர்க்க நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 அறிமுகம். நகர்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார். 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News