பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்

BJP Lok Sabha Election 2024: 60 கோடி மக்களின் ஆசியுடன் மூன்றாவது முறையாக அமோக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் ரகசிய பார்முலாவை பற்றி கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

Written by - Shiva Murugesan | Last Updated : May 17, 2024, 03:37 PM IST
  • நான் "அரசியல் சாணக்கியன்" இல்லை -உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • ஏற்கனவே பாஜகவுக்கு பெரும்பான்மை.. 400 ஐத் தாண்டுவோம் -அமித் ஷா
  • வெற்றியடைவதற்கான சாத்தியக்கூறுகள் 60% குறைவாக இருக்கும் பட்சத்தில் "பிளான் பி" தேவைப்படும் -அமித் ஷா
பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில் title=

Amit Shah on Lok Sabha Election: அரசியல் மேடையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 'அரசியல் சாணக்யா' என்று அழைக்கிறார்கள். ஆனால் இந்தமுறை அவரின் அரசியல் தந்திரம் வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து கேட்டபோது, நான் "அரசியல் சாணக்கியன்" இல்லை என்று அமித் ஷா தெளிவாக கூறினார். மேலும் இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 400 ஐத் தாண்டும் எனவும் கூறினார். ஆனால் எதிர்கட்சிகள் நிச்சயமாக பாஜக இந்தமுறை ஆட்சி அமைக்காது எனக் கூறி வருகின்றனர். 

பாஜக 400 ஐத் தாண்டும் -அமித் ஷா நம்பிக்கை

லோக்சபா தேர்தலில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடக்கிறது. நான்கு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஏற்கனவே பெரும்பான்மையைப் பெற்றுள்ளது, இப்போது அது 400 ஐத் தாண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க - வீடு, கார் இல்லை... பிரமதர் மோடியின் சொத்து மதிப்பு... 2019 - 2024 ஓர் ஒப்பீடு!

தேர்தலில் ஜெயிக்க "பிளான் பி" திட்டம் இருக்கிறதா?

அப்பொழுது லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள ஜூன் 4 ஆம் தேதி 272 என்ற எண்ணிக்கையை பாஜகவால் கடக்க முடியாவிட்டால், "பிளான் பி" என ஏதாவது திட்டம் வைத்துள்ளீர்களா? எனக் கேட்டதற்கு, பதிலளித்த அமித் ஷா, அப்படியொரு நிலையை நான் காணவில்லை. இந்த நாட்டில், 60 சதவீத மக்கள் ராணுவம் போல மோடி ஜியுடன் வலுவாக நிற்கிறார்கள். பிரதமர் மோடி மிகப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறார் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும் என்றார். மேலும் "பிளான் ஏ" வெற்றியடைவதற்கான சாத்தியக்கூறுகள் 60 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் "பிளான் பி" தேவைப்படும் எனக் கூறினார்.

60 சதவீத மக்கள் மோடி பக்கம் உள்ளனர் -அமித் ஷா

60 சதவீத மக்கள் மோடி பக்கம் உள்ளனர் என்பதற்கான சில உதாரணங்களை பட்டியலிட்டார். அவை, சுமார் 4 கோடி ஏழைகளுக்கு வீடுகளை வழங்கியுள்ளோம், இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மேலும் 3 கோடி வீடுகளை வழங்க உள்ளோம். 32 கோடி ஆயுஷ்மான் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன, அதன் எண்ணிக்கை 60 கோடியை எட்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் என சுமார் 14 கோடி வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. 10 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. 12 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. மாதம் 500 ரூபாய் கூட வருமானம் இல்லாத 1 கோடியே 41 லட்சம் ஏழைப் பெண்கள் லக்பதி திதி ஆக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 11 கோடி விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஏழைக்கும் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது என நீண்ட பட்டியலை முன்வைத்து, இப்படி சுதந்திரத்திற்குப் பிறகு, 60 கோடி ஏழைகளுக்கான திட்டங்களை வகுத்து, அவற்றை இந்த மண்ணில் செயல்படுத்திய முதல் பிரதமர் மோடி ஜி என்றார் அமித் ஷா.  

இப்படி அனைத்து திட்டங்களுக்கான பயன் அடைந்தவர்களுக்கு தெரியும் "நரேந்திர மோடி யார் என்றும், அவர்களுக்கு 400 இடங்களை ஏன் கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் பெற்றவருக்குத் தெரியும் என்றார்.

மேலும் படிக்க - அமேதியில் காங்கிரஸ்-பாஜக கடும் போட்டி: கை ஓங்குமா, தாமரையே நீடிக்குமா?

உலக அரங்கில் இந்தியாவின் மரியாதை

நாடு வளமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும், உலகில் இந்தியாவின் மரியாதை அதிகரிக்க வேண்டும் என்று முழு நாடும் விரும்புகிறது. கடந்த 10 ஆண்டுகளில் உலகில் நாட்டின் மரியாதை அதிகரித்திருப்பதாக ஏழை, பணக்காரர் உட்பட அனைவரும் நம்புகிறார்கள் என்றார்.

இடஒதுக்கீடு குறித்து அமித் ஷா கூறியது.. 

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி "இடஒதுக்கீட்டை" ஒரு பிரச்சினையாக மாற்றியுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சட்டத்தை மாற்றி இடஒதுக்கீடும் ஒழிக்கப்படும் என்று கூறப்படுகிறது என கேட்டதற்கு, இதுகுறித்து அமித் ஷா கூறுகையில், பாஜகவை சேர்ந்த கடைசி ஒரு எம்பி இருக்கும் வரை, எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை யாராலும் தொட முடியாது. நரேந்திர மோடியை விட எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக யாரும் இல்லை.

தென் இந்தியா அரசியல் பற்றி அமித் ஷா கூறியது..

தென் இந்தியா அரசியல் பற்றி கேட்டபோது, "தனிநாடு என்று யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இந்த நாட்டை யாராலும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்க வேண்டும் என்று பேசினார். இதை காங்கிரஸ் கட்சி மறுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டம் என்ன என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த தேர்தலை பொருத்தவரை கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய போட்டியாளராக மாறப்போகிறது என்றார். 

ஒடிசாவில் ஆட்சி மாறப்போகிறது -அமித் ஷா

அதேபோல ஒடிசா அரசியல் சூழ்நிலையைப் பார்த்தால், அங்கு ஆட்சி மாறப்போகிறது என்றும் நம்புகிறேன் என அமித் ஷா கூறினார்.

மேலும் படிக்க - பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: வைகோ அறிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News