‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம்

Lok Sabha Elections 2024: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமளிக்க பிரதமரிடம் கால அவகாசம் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே, ‘பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டாம்’ எனக் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 25, 2024, 05:04 PM IST
‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம் title=

பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன் கார்கே கடிதம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன். நாட்டின் பிரதமர் என்ற முறையில் பொய்யான அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்பதற்காகவே, நேரில் சந்தித்து விளக்கம் தர விரும்புகிறேன்.அதற்கான நேரத்தை ஒதுக்குங்க என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று (ஏப்ரல் 25, வியாழக்கிழமை) கடிதம் எழுதியுள்ளார். 

லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, ​​'சொத்து மறுபங்கீடு' மற்றும் 'பரம்பரை வரி' தொடர்பாக, காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததையடுத்து, காங்கிரஸ் தலைவர் கார்கே இந்த கடிதத்தை எழுதியுள்ளார். மக்களின் சொத்துக்களை அபகரித்து 'முஸ்லிம் சமூகத்தினருக்கு' பகிர்ந்தளிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று பிரதமர் சமீபத்திய தேர்தல் கூட்டங்களில் தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது..

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத அம்சங்கள் பற்றி நீங்கள் தொடர்ந்து பேசி வருவதால் உங்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன். பிரதமர் என்ற முறையில் பொய்யான அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்பதற்காகவே நேரில் சந்தித்து விளக்கம் தர விரும்புகிறேன். அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள் எனக் கேட்டுள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இளைஞர், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கானது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத அம்சங்கள் பற்றி உங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக உங்களின் மொழி மற்றும் பேச்சுகளால் நான் வியப்படையவில்லை. முதல் கட்டத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்காததால், அந்த ஏமாற்றத்துக்குப் பிறகு, இப்படிப் பேசுவீர்கள் என்று உங்களிடமும் உங்கள் கட்சித் தலைவர்களிடமும் எதிர்பார்க்கப்பட்டது தான்.

இப்படி பேசி பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைக்கிறீர்கள். இதெல்லாம் தேர்தல் முடியும் போது, ​​தோல்வி பயத்தில் பிரதமர் இப்படி அசிங்கமான வார்த்தைப் பிரயோகம் செய்தது மக்களுக்கு நினைவிருக்கும். 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாத விஷயங்கள் குறித்து பிரதமர் தனது ஆலோசகர்களால் தவறாக வழிநடத்தப்படுவதாக கருதுகிறேன். நான் உங்களை நேரில் சந்தித்து எங்கள் 'நியா பத்ரா' தொடர்பான உண்மைகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன், இதனால் நாட்டின் பிரதமராக நீங்கள் இதுபோன்ற தவறான அறிக்கைகளை வெளியிட வேண்டாம்.

சில வார்த்தைகளை சூழலுக்கு புறம்பாக எடுத்துவிட்டு மத பிளவை உருவாக்குவது பிரதமரின் வழக்கமாகி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது கடிதத்தில் கூறியுள்ளார். 

மேலும் படிக்க - கடந்த முறை முதல் கட்டத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி.. மீண்டும் சாத்தியமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News