பாஜகவில் இணைகிறாரா... இந்திரா காந்தியின் ‘3வது மகன்’ கமல்நாத்... பரபரக்கும் அரசியல் களம்!

இந்திரா காந்தியின் மூன்றாவது மகன் என்று அழைக்கப்பட்ட சஞ்சய் காந்தியின் நெருங்கிய நண்பரான கமல்நாத் தனது மகனுடன் பாரதீய ஜனதா கட்சியில் சேர உள்ளார் என்ற செய்தி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 18, 2024, 07:58 AM IST
  • காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும் பாஜக பக்கம் சேர்வது, காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.
  • சஞ்சய் காந்தியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த கமல் நாத்.
  • நேரு குடும்பத்தின் மிக நெருக்கமான நபர் பாஜகவில் சேர இருப்பது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
பாஜகவில் இணைகிறாரா... இந்திரா காந்தியின் ‘3வது மகன்’ கமல்நாத்... பரபரக்கும் அரசியல் களம்! title=

இந்திரா காந்தியின் மூன்றாவது மகன் என்று அழைக்கப்பட்ட, சஞ்சய் காந்தியின் மிக நெருங்கிய நண்பரான கமல்நாத் தனது மகனுடன் பாரதீய ஜனதா கட்சியில் சேர உள்ளார் என்ற செய்தி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திரா காந்தி, பொதுக்கூட்டம் ஒன்றில், கமல் நாத் தனது மூன்றாவது மகன் என்று அறிவித்திருந்தார். இந்திரா காந்தியின் நெருக்கடியான காலகட்டங்களில், கமல்நாத் அவருக்கு பெரும் பக்கபலமாக நின்றார். இந்த அளவிற்கு, நேரு குடும்பத்தின் மிக நெருக்கமான நபர் பாஜகவில் சேர இருப்பது பெரும் புயலை கிளப்பியுள்ளது.

சஞ்சய் காந்தியுடன் நெருக்கமான நட்பு கொண்ட கமல் நாத்

இளமை பருவத்தில், டூன் கல்லூரில் படிக்கும் போது, சஞ்சய் காந்தியுடன், நெருக்கமான நட்பு கொண்ட கமல் நாத்தை, அரசியலுக்கு கொண்டு வந்தவர் சஞ்சய் காந்தி தான். கமல் நாத்தின் தேர்தல் பயணம் 1980 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், அவர் சிந்துவாரா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2018 ஆம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராக இருந்த கமல்நாத், மத்திய பிரதேசத்திற்கு முதல்வராக பதவியில் இருந்தார்.

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி

மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் முகமாக அறியப்படும் கமல் நாத், அண்மையில் முடிந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து, அவருக்கு எதிராக கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு கமலநாதன் காரணம் என்றும், பாரதிய ஜனதா கட்சியின் வீட்டின் போல செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது இதற்கு காரணம். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் உச்சகட்ட நிலையை அடைந்தது.

மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியல்! தமிழ்நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா?

மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி

மத்திய பிரதேசத்தில் ராஜ்யசபா தேர்தலில், தனக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த கமல் நான், தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை வழங்காததால் அதற்கு அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் தன் மகனுக்கு சிந்துவாரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் இருந்தது.

பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் போது தொடர்ந்து கிடைக்கும் அதிர்ச்சிகள்

பாரத் ஜோடோ நீதி யாத்திரை, பீகாரில் நுழையும் போது, நித்திஷ் குமார் பாஜக கூட்டணியில் இணைந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்னும் சில நாட்களில், பாரத் ஜோடோ நீதி யாத்திரை மத்திய பிரதேசத்தில் நுழைய உள்ள நிலையில், கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல்நாத் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக யூகங்கள் கொடி கட்டி பறக்கின்றன. அதோடு சில தினங்களுக்கு முன்பு தான் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் பாஜகவில் இணைந்து, காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்தார். தற்போது மத்திய பிரதேசத்தில் நுழைவதற்கு முன்னதாகவே இப்போது இன்னொரு செய்தி காங்கிரசுக்கு பேரதிர்ச்சியாக வந்துள்ளது.

சஞ்சய் காந்தியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த கமல் நாத்

பள்ளி கால நண்பர்கள் என்பதால், சஞ்சய் காந்திக்கும் கமல் நாட்டிற்கும் இடையே நெருங்கிய நட்பு நிலவியது. காங்கிரஸ் கட்சியில், செல்வாக்கு மிக்க தலைவராக மாற கமல் நாட்டிற்கு இந்த நட்பு பெரிதும் உதவியது. ஆனால் சமீப காலமாக, கட்சி மேலிடத்துடன் நல்லுறவு இல்லை என்று கூறப்படுகிறது. அதோடு மத்திய பிரதேச சட்டமன்ற தோல்விக்கு பிறகு, ராகுல் காந்தி மற்றும் கமல் நாட்டு இடையே, பேச்சுவார்த்தையே இல்லை என்று கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. அதோடு, மாநிலங்களவை சீட்டும் கிடைக்காததால், கமல் நாட் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

கமல்நாத்தின் மகன் நகுல்நாத்தின் சமூக வலைதள பக்கம்

தமிழ்நாடு பாஜகவில் இணையுள்ளதாக வரும் தகவல்களை வலுப்படுத்தும் விதமாக, அவரது மகன் அக்குள் நாத் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி என்ற பெயரை நீக்கினார். 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றாக தன்னை விடுவித்துக் கொண்டு, மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என விலகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும் பாஜக பக்கம் சேர்வது, காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது என்றால் மிகை இல்லை.

மேலும் படிக்க | அடி தூள்!! இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம்... உயர்நீதிமன்ற உத்தரவு வந்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News