சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; 87.98% தேர்ச்சி!

CBSE Class 12th Result 2024 OUT: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbseresults.nic.in மற்றும் cbse.gov.in இல் தேர்வு முடிவுகளை பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 13, 2024, 01:02 PM IST
  • சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானது.
  • 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; 87.98% தேர்ச்சி! title=

CBSE Class 12th Result 2024 OUT Online: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று அதாவது மே 13ஆம் தேதி வெளியிட்டது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகளை மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் - cbseresults.nic.in மற்றும் cbse.gov.in - மற்றும் DigiLocker இணையதளம் - digilocker.gov.in மற்றும் UMANG பயன்பாடு உள்ளிட்ட பிற டிஜிட்டல் தளங்களில் சரிப்பார்க்கலாம்.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணைப்பு | CBSE Class 12 results link:
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவைப் பார்க்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பார்வையிடலாம்.

- cbse.gov.in
- cbseresults.nic.in
- results.digilocker.gov.in
- umang.gov.in

தேர்வு முடிவைப் பார்க்க நற்சான்றிதழ்கள் தேவை:
CBSE சீனியர் செகண்டரி 2024 தேர்வு முடிவை மாணவர்கள் சரிபார்த்து பதிவிறக்கம் செய்ய மூன்று இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வெழுதிய மாணவர்கள் சிபிஎஸ்இ வழங்கிய ஏதேனும் ஒரு இணைப்பைத் திறந்து ரோல் எண்ணை உள்ளிட்டு தங்கள் தேர்வு முடிவைச் சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க | நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு! 96 நாடாளுமன்றத் தொகுதிகள், 1717 வேட்பாளர்கள்!

ஒவ்வொரு பள்ளியின் தனித்தனி தேர்வு முடிவுகள் பள்ளிகளின் மின்னஞ்சல் ஐடியில் கிடைக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது:
12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் தேர்ச்சி சதவீதம் 2023 ஆம் ஆண்டில் 87.33 சதவீதத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டில் 87.98 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 0.65 சதவீதம் அதிகரித்துள்ளது.

எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்?
இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்த 16,33,730 மாணவர்களில் 16,21,224 மாணவர்கள் எழுதினர். அவர்களில் 14,26,420 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவனந்தபுரம் மாணவர்கள் அசத்தல்:
இன்று அறிவிக்கப்பட்ட சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில், திருவனந்தபுரம் மாணவர்கள் 99.91 சதவீத பேர் தேர்ச்சியடைந்து முதலிடத்திலும், விஜயவாடா மற்றும் சென்னை முறையே 99.04 சதவீதமும், 98.47 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

பெண் அல்லது ஆண், யார் அதிகம் தேர்ச்சி?
கடந்த ஆண்டு 90.68 சதவீதமாக இருந்த மாணவிகளின் தேர்ச்சி இந்த ஆண்டு 91.52 சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85.12 சதவீதமாகவும், கடந்த ஆண்டு 84.67 சதவீதமாகவும் இருந்துள்ளது. ஆண்களை விட பெண்கள் 6.40 சதவீதம் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த ஆண்டு திருநங்கைகளின் தேர்ச்சி சதவீதம் 50 ஆகவும், கடந்த ஆண்டு 60 சதவீதமாகவும் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 'பிரதமர் வருவாரா சொல்லுங்கள்... பொது விவாதத்திற்கு நான் தயார்' - ராகுல் கொடுத்த கிரீன் சிக்னல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News