லிவ்-இன் காதலியை கொன்று குக்கரில் வேகவைத்த காதலன் - உடலுறுப்புகளை நாய்களுக்கு கொடுத்தாரா?

Mumbai Live-In Murder: கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் பிளாஸ்டிக் பைகளிலும், பெட்ஷீட்களிலும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 8, 2023, 03:59 PM IST
  • அந்த பெண்ணின் உடல் உறுப்பில் 13 துண்டுகளை போலீசார் அந்த வீட்டில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.
  • சில உடல் உறுப்புகளை குற்றஞ்சாட்டப்பட்டவர் குக்கரில் வேகவைத்ததாகவும் கூறப்படுகிறது.
  • இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்டவர் விசாரணையில் குற்றத்தை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.
லிவ்-இன் காதலியை கொன்று குக்கரில் வேகவைத்த காதலன் - உடலுறுப்புகளை நாய்களுக்கு கொடுத்தாரா? title=

Mumbai Live-In Murder: கொலை செய்யப்பட்ட பெண், 32 வயதான சரஸ்வதி வைத்யா என்பவர் என தெரியவந்தது. மும்பையின் மீரா ரோட்டின் கீதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் ஏழாவது மாடியில் உள்ள அவரது குடியிருப்பில் நேற்று, சரஸ்வதியின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக நயா நகர் காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சரஸ்வதி, 56 வயதான மனோஜ் சானே என்பவருடன் கடந்த மூன்று ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். அந்த தம்பதியினர் வாடகைக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

அவர்களின் குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரை அடுத்து, காவல்துறையினர் அங்கு சென்றதாக தெரிகிறது. அங்கு வந்த அதிகாரிகள், சரஸ்வதியின் சிதைந்த உடலைக் கண்டெடுத்தனர். அவரின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது. மேலும், அந்த பெண்ணின் உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்ததாகவும் விசாரணையில் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்தது என்று மும்பை துணை காவல் ஆணையர் ஜெயந்த் பஜ்பலே தெரிவித்தார். 

மனோஜ், மரம் அறுக்கும் ரம்பத்தை வாங்கி, சரஸ்வதியின் உடலை வெட்டியுள்ளார் என கூறப்படுகிறது. அவரின் உடலை 13 துண்டுகளாக மனோஜ் வெட்டியதாக கூறப்படும் நிலையில், மேலும், 7-8 துண்டுகளை துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக குக்கரில் வேகவைத்திருக்கலாம் என்றும், அதனை தெருநாய்களுக்கு கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் அந்த குடியிருப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். 

இந்த பயங்கரமான சம்பவத்தை அடுத்து, சரஸ்வதியுடன் லிவ்-இன் உறவில் இருந்து மனோஜை , காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். குற்றத்திற்கான நோக்கத்தை இன்னும் காவலர்கள் தெரிவிக்கவில்லைலை. இந்த கொடூர கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க போலீசார் மனோஜிடம் தீவிரம் விசாரணையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், சரஸ்வதி தற்கொலை செய்து கொண்டதாக மனோஜ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்பட்டது.

மேலும் படிக்க | ஆணாதிக்கம் வெறுக்கப்பட வேண்டியது: கேரள உயர் நீதிமன்றத்தை கூற வைத்த ரெஹானா ஃபாத்திமா யார்?

"நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், சரஸ்வதி கொல்லப்பட்டதற்கான காரணத்தை கண்டறிவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்கள் விசாரணையில் உதவக்கூடிய எந்தவொரு தகவலையும் எங்களிடம் அளிக்க பொதுமக்கள் முன்வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று துணை காவல் ஆணையர் பஜ்பலே கூறினார்.

கடந்த ஆண்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்குக்கும் இந்த சம்பவத்துக்கும் விசித்திரமான ஒற்றுமைகள் உள்ளன. ஷ்ரத்தா, 27 வயதான கால் சென்டர் ஊழியர் ஆவார், அவர் தனது லிவ்-இன் துணையான ஆப்தாப் பூனாவாலாவால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். பின்னர் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்களுக்கு மேலாக வனப்பகுதியில் வீசியிருந்தார். 

ஆறு மாதங்களுக்குப் பிறகு, வால்கரின் தந்தை பல மாதங்களாக அவரைத் தொடர்பு கொள்ளத் தவறியதால், அவர் புகார் அளித்தபோதுதான் இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது. ஆப்தாப் பூனாவாலா மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்ததாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர் உயிருடன் வந்த சம்பவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News