அதெல்லாம் பொய்யுங்க.. நாங்க சொல்வது தான் உண்மை -தேர்தல் பேரணியில் முழங்கிய அமித் ஷா

Amit Shah Speech: மோடி ஆட்சியில் சீனாவால் நமது நிலத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை... ஊடுருவல் நிறுத்தப்பட்டுள்ளது என அமித் ஷா மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் மத்தியில் உரை.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 9, 2024, 09:18 PM IST
  • அசாமில் அமித் ஷாவின் தீவிர தேர்தல் பிரச்சாரம்
  • அசாம் மாநிலத்துக்கு காங்கிரஸ் அநீதி இழைத்தது
  • இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட சீனா எடுக்கவில்லை
அதெல்லாம் பொய்யுங்க.. நாங்க சொல்வது தான் உண்மை -தேர்தல் பேரணியில் முழங்கிய அமித் ஷா title=

2024 India General Election: 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் அனைத்து கட்சிகளும், பொதுமக்கள் தங்கள் பக்கம் இருப்பதை உறுதி செய்யவும், ஓட்டுகளை கவரும் வகையில், பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி போன்ற முக்கியத் தலைவர்கள் தேர்தல் பேரணிகளில் உரையாற்றி வருகிறார்கள். 

பாஜகவுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மோடி அரசாங்கத்தின் கீழ், சீனாவால் இந்திய நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என்றும்,  வங்கதேசத்துடனான எல்லையைப் பாதுகாத்து ஊடுருவலை முழுமையாக தடுத்து நிறுத்தபட்டு உள்ளது என்றார். மேலும் அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நடத்திய விதத்தை, அந்த மாநில மக்களால் மறக்க முடியாது என்றும் அமித் ஷா கூறினார்.

தேர்தல் பேரணியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது..

லக்கிம்பூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நரேந்திர மோடி அரசின் கீழ் ஒரு அங்குல நிலத்தை சீனாவால் ஆக்கிரமிக்க முடியாது என்றும், மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு வங்கதேசத்துடனான நாட்டின் எல்லையை பாதுகாத்துள்ளது மற்றும் ஊடுருவலை தடுத்து நிறுத்தியது. 

சீனாவால் நமது நிலத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை -ஷா

1962 சீன ஆக்கிரமிப்பின் போது, நேரு அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு 'பை-பை' கூறினார். இந்த மாநிலங்களின் மக்கள் அதை ஒருபோதும் மறக்க முடியாது" என்று அமித்ஷா கூறினார். ஆனால் இப்போதும் சீனாவால் நமது நிலத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை. டோக்லாமில் கூட, எங்கள் அரசு (பாஜக) அவர்களை பின்னுக்குத் தள்ளினோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க - பாஜக ஆட்சியின் 10 வருட ரிப்போர்ட் கார்டுடன் மக்களை சந்திக்கிறோம்: வானதி சீனிவாசன்

வங்கதேச ஊடுருவல் முழுமையாக தடுக்கப்பட்டது

வங்கதேசத்துடனான அஸ்ஸாமின் எல்லை காங்கிரஸ் ஆட்சியில் "ஊடுருவ திறந்திருந்தது" என்று அமித் ஷா குற்றம்சாட்டினார். பின்னர் மத்தியில் மோடி அரசும், இங்கு ஹிமந்த பிஸ்வா சர்மாவின் அரசும் வந்தது. இப்போது, ஊடுருவல் முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது என்று கூறினார். 

மோடி ஆட்சியில் அசாமில் அமைதி ஒப்பந்தங்கள் 

அசாமில் முந்தைய காங்கிரஸ் அரசு அநீதி இழைத்ததாகவும், பல்வேறு வன்முறை இயக்கங்கள் மற்றும் கிளர்ச்சி தொடர்பான சம்பவங்களில் ஏராளமான இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் கீழ் அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி 9,000 இளைஞர்கள் சரணடைந்துள்ளனர்.

மேலும் படிக்க - இட ஒதுக்கீட்டில் வேலைக்கு வரும் நம் பிள்ளைகளை பார்த்தாலே பாஜக கதறுகிறது - ஸ்டாலின் சரவெடி!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்த அமித் ஷா

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தாக்கி பேசிய அமித் ஷா, அது முஸ்லிம் தனிநபர் சட்டத்திற்கு சாதகமாக இருப்பதாக கூறினார். “ஹிமந்தா பிஸ்வா சர்மா குழந்தை திருமணங்களை நிறுத்தியுள்ளார். உத்தரகாண்டில், பொது சிவில் சட்டம் உள்ளது என்று அவர் ஒரு ஒப்பீடு செய்தார். 

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் -ஷா

வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சியே தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மையம் என்று கூறிய அமித் ஷா, அப்பகுதியின் அனைத்து இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். 

ராகுல் காந்தி-ஆ? மோடி-ஆ? அமித் ஷா கேள்வி

மேலும் மக்களை பார்க்த்து "உங்கள் முன் இரண்டு மாற்று வழிகள் உள்ளன. ராகுல் காந்தி மற்றும் இந்திய கூட்டணிக்கு வாக்களியுங்கள், அல்லது மோடி தலைமையிலான பாஜகவுக்கு வாக்களியுங்கள்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்

மேலும் படிக்க - A டூ Z.. கொடி பறக்குது! காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள் பட்டியல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News