புகையிலை விளம்பரம் - மன்னிப்பு கேட்டார் அக்‌ஷய் குமார்

பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக அக்‌ஷய் குமார் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Last Updated : Apr 21, 2022, 05:45 PM IST
  • பான் மசாலா விளம்பரத்தில் நடித்த அக்‌ஷய் குமார்
  • மன்னிப்பு கேட்ட அக்‌ஷய் குமார்
  • அக்‌ஷய் குமாருக்கு வலுத்த கண்டனங்கள்
புகையிலை விளம்பரம் - மன்னிப்பு கேட்டார் அக்‌ஷய் குமார் title=

பாலிவுட் பிரபல நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய் குமார் தமிழில் 2.0 படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கென்று ரசிகர்கள் இருக்கும் சூழலில் அக்‌ஷய் பான் மசாலா புகையிலை விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.மேலும், இந்த விளம்பரத்தில் அஜய் தேவ்கானும், ஷாருக்கானும் நடித்திருக்கின்றனர்.

சில காலத்திற்கு முன்பு புகையிலை தொடர்பான விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என கூறியிருந்த சூழலில் தற்போது அவர் நடித்திருப்பது சர்ச்சைக்கும், கண்டனத்திற்கும் வித்திட்டுள்ளது.மேலும், அவருக்கு எதிராக ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Pan Masala Ad

இந்நிலையில் அக்‌ஷய் குமார் பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “கடந்த சில நாள்களாக ரசிகர்களின் எதிர்ப்பு அலை எனக்கு நல்லாவே புரிகிறது. 

மேலும்  படிக்க | அல்லு அர்ஜுனை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்... எதற்கு தெரியுமா?

ஒருபோதும் நான் புகையிலை பொருட்களை ஆதரித்து நடித்தது இல்லை. இனிமேலும், நடிக்கமாட்டேன். சமீபத்தில் வெளியான விமல் எலாய்ச்சி விளம்பரத்தில் நடித்ததற்கும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேல், அதுபோன்ற விளம்பரத்திலும் நான் நடிக்க மாட்டேன் என உறுதியளிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னதாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்ததும், அவருக்கு பலரும் தங்களது பாராட்டையும் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கஞ்சாவுக்கு அடிமையான இளம் பெண் மரணம் : நடந்தது என்ன.?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News