கோடை காலத்தில் உங்க சருமத்தை பாதுகாக்க இதை மட்டும் பண்ணுங்கள்

Skin Care Tips: இன்று நாங்கள் உங்களுக்கு வெள்ளரிக்காய் ஃபேஸ் டோனர் செய்யும் முறையைக் கற்றுத் தர உள்ளோம். வெள்ளரி ஃபேஸ் டோனர் உங்கள் சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாக்குகிறது, இதனால் நீங்கள் வறண்ட சருமத்தைத் தவிர்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 7, 2023, 04:53 PM IST
  • பளபளப்பாக ஜொலிக்க வைக்க இதை செய்தால் போதும்.
  • கோடைகாலத்தில் உங்கள் சருமத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கோடை காலத்தில் உங்க சருமத்தை பாதுகாக்க இதை மட்டும் பண்ணுங்கள் title=

வெள்ளரி ஃபேஸ் டோனர் செய்வது எப்படி: கோடையில் உடலை குளிர்விக்க உதவும் வெள்ளரிக்காய் சருமத்தையும் குளிரப்படுத்துகிறது. நார்ச்சத்து, கரோட்டின், வைட்டமின் சி, ஏ, போன்ற சத்துக்கள் கொண்டிருக்கிறது. இவை சருமத்தின் எரிச்சல், அரிப்பு, தடிப்பு போன்றவற்றை நீக்ககூடியது. கண்களின் கரும்புள்ளிகளை மறையச்செய்யகூடியது பெரும்பாலான குளிர்ந்த ஃபேஸ் பேக்குகளில் வெள்ளரிக்காயை மிக முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளரிக்காய் 95% நீர்ச்சத்து நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். அதனால்தான் அதை உட்கொள்வதன் மூலம் உங்கள் உடல் நீரேற்றமாக இருக்கும். ஆனால் வெள்ளரிக்காய் உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இன்று நாங்கள் உங்களுக்கு வெள்ளரிக்காய் ஃபேஸ் டோனர் செய்யும் முறையைக் கற்றித் தர உள்ளோம். வெள்ளரி ஃபேஸ் டோனர் உங்கள் சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாக்குகிறது, இதனால் நீங்கள் வறண்ட சருமத்தைத் தவிர்க்கலாம். இதுவும் வெயிலில் இருந்து நிவாரணம் தருகிறது. இதனுடன் வெள்ளரிக்காயில் முதுமையைத் தடுக்கும் தன்மையும் நிறைந்துள்ளது, இதனால் முதுமையின் அறிகுறிகளைத் தடுக்கலாம், எனவே வெள்ளரிக்காய் ஃபேஸ் டோனரை எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம்.....

மேலும் படிக்க | நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் ஏழு சூப்பர் உணவுகள்

வெள்ளரிக்காய் ஃபேஸ் டோனர் செய்ய தேவையான பொருட்கள்-

வெள்ளரி 1
கற்றாழை ஜெல்
அரை லிட்டர் தண்ணீர்

வெள்ளரிக்காய் ஃபேஸ் டோனர் செய்வது எப்படி?
* வெள்ளரிக்காய் ஃபேஸ் டோனரை உருவாக்க, முதலில் 1 வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின்னர் அதை அரைத்து அதன் சாறு ஒரு பாத்திரத்தில் எடுக்கவும்.
* அதன் பிறகு, கற்றாழை இலையிலிருந்து புதிய ஜெல்லை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
* பின்னர் நீங்கள் தயாரிக்கப்பட்ட கலவையில் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து கலக்கவும்.
* இதன் பிறகு, தயார் செய்த கலவையை மிக்ஸியில் போட்டு ஒரு முறை நன்றாக அரைக்கவும்.
* பின்னர் நீங்கள் தயார் செய்த டோனரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும்.
* இப்போது உங்கள் கோடைக்காலம் சரும பாதுகாப்பிற்காக புத்துணர்ச்சியூட்டும் வெள்ளரிக்காய் ஃபேஸ் டோனர் தயார்.

வெள்ளரிக்காய் ஃபேஸ் டோனரை எவ்வாறு பயன்படுத்துவது?
* வெள்ளரிக்காய் ஃபேஸ் டோனரைப் பயன்படுத்துவதற்கு முன், தினமும் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் முகத்தை நன்கு கழுவவும்.
* பின்னர் முகத்தை துடைத்து, காட்டன் அல்லது ஸ்ப்ரே பாட்டிலின் உதவியுடன் முகத்தில் டோனரை தடவவும்.
* இது உடனடியாக உங்கள் சருமத்தை புத்துணர்ச்சி மற்றும் பளபளப்புடன் சருமத்தை வைத்திருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் சோள உப்புமா... தயாரிக்கும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News