ஓட்டப்பயிற்சி Vs நடைப்பயிற்சி: உடல் எடையை சீக்கிரம் குறைக்க உதவுவது எது?

Jogging Vs Walking Which One Is Better? உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், ஓட்டப்பயற்சி அல்லது நடைப்பயிற்சியை மேற்கொள்வது வழக்கம். இவை இரண்டில் உடலுக்கு அதிக நன்மை பயப்பது எது என தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Feb 12, 2024, 03:45 PM IST
  • அதிக கொழுப்பை எரிக்க ஓட்டப்பயிற்சி சிறந்தது.
  • நடைப்பயிற்சி செய்தால் இதய நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
  • இவை இரண்டில் எது சிறந்தது?
ஓட்டப்பயிற்சி Vs நடைப்பயிற்சி: உடல் எடையை சீக்கிரம் குறைக்க உதவுவது எது? title=

Jogging Vs Walking Which One Is Better For Your Health Which Helps You to Loose Weight? நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டுமே நல்ல கார்டியோ உடற்பயிற்சிகளாகும். இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்று கூட சொல்லலாம். ஒருவர் ஃபிட் ஆக வேண்டும் என்று நினைத்தால் அவர்களுக்கு எது பயனுள்ளதாக இருக்கும் என்பதை பொறுத்து, நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சியில் எது சிறந்தது என தேர்ந்தெடுக்கலாம். 

எது சிறந்தது? 

நீங்கள் சீக்கிரமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தாலோ, அல்லது அதிகமாக கொழுப்பை கரைக்க வேண்டும் என்று நினைத்தாலோ ஓட்டப்பயிற்சி சிறந்த தேர்வாக அமையும். ஆனால், அதே சமயத்தில் வாக்கிங் செல்வதிலும் பல நன்மைகள் அடங்கியிருக்கிறது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஏற்கனவே உடல் எடையை சரியாக பராமரித்து வருபவர்கள், தினமும் வாக்கிங் செய்தால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம். எனவே, உங்கள் உடலை பொறுத்து, உங்களின் உடற்பயிற்சி முறையை பொறுத்து எது தேவை என்பதை பார்த்து நடைப்பயிற்சி அல்லது ஓட்டப்பயிற்சி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். 

தீவிர உடற்பயிற்சியா..அதி தீவிர உடற்பயிற்சியா? 

இதய துடிப்பை சகஜமான நிலையில் இருந்து கொஞ்சம் அதிகரிக்கச்செய்யும் உடற்பயிற்சிகளை, கார்டியோ உடற்பயிற்சிகள் என கூறுவர். இதில், குறைவான தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகள், அதி தீவிர உடற்பயிற்சிகள் என இரண்டு வகைகள் இருக்கின்றன. இந்த இரண்டில், நடைப்பயிற்சி குறைந்த தீவிர உடற்பயிற்சி பிரிவில் அடங்கும். ஓட்டப்பயிற்சி, மிதமான தீவிர பயிற்சி வகையில் அடங்கும். 

கார்டியோ உடற்பயிற்சிகள் லிஸ்ட்:

கார்டியோ வகை உடற்பயிற்சிகளால் உடல் எடை குறைவது மட்டுமன்றி, பல நன்மைகளும் உண்டாகும். அப்படி செய்ய வேண்டிய கார்டியோ உடற்பயிற்சிகளின் லிஸ்ட் இதோ. 

>கயிறு தாண்டுதல்
>ஜம்பிங் ஜாக்ஸ்
>பர்பீஸ்
>சைக்ளிங்
>ஸ்குவாட்ஸ்
>நடனம் ஆடுவது
>ஹை நீஸ்
>படி ஏறுதல்
>ஓட்டப்பயிற்சி
>ப்ளாங்க் ஜாக்ஸ்

ஓட்டப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்:

>தினமும் 10 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் இதய நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
>ஓட்டப்பயிற்சி, நல்ல தூக்கத்திற்கு உதவும்.
>முட்டி மற்றும் முதுகுப்பகுதியை ஹெல்தியாக வைத்திருக்க ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
>ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதால் நமது சிந்தனை திறன் அதிகரிக்கும் என ஒரு மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
>நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பயிற்சிகளுள் ஒன்று, ஓட்டப்பயிற்சி.

மேலும் படிக்க | வேகமா உடல் எடையை குறைக்கணுமா? உடனே பப்பாளியை இப்படி சாப்பிடுங்க போதும்

நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:

>நாம் எந்த வேகத்தில் நடக்கிறோம் என்பதை பொறுத்து உடலில் உள்ள கொழுப்பு குறையும்.
>இதயத்தை ஹெல்தியாக வைத்திருக்க உதவும்.
>இரத்தத்தில் கலந்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
>மூட்டு வலிகளை சரிசெய்ய உதவும்
>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
>மன நிலையை சீர் செய்யும்.
>தொடை சதைகளை குறைக்க உதவும்

ஓட்டப்பயிற்சியையை விட நடைப்பயிற்சி சிறந்ததா?

நடைப்பயிற்சியில் பல நன்மைகள் ஒளிந்திருக்கலாம். இதனால் உடலில் கொழுப்பும் கரையும் என்பதை மறுக்கவே முடியாது. ஆனால், ஓட்டப்பயிற்சி செய்தால் நடைப்பயிற்சியினால் நாம் எரிக்கும் கொழுப்பின் அளவை விட டபுள் மடங்காக எரிக்கலாம். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக ஓட்டப்பயிற்சியை அவர்களின் தினசரி உடற்பயிற்சிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக ஓட்டப்பயிற்சி மேற்கொள்பவராக இருந்தால் மெதுவாக அதனை ஆரம்பிக்கலாம். 

மேலும் படிக்க | என்றும் இளமைக்கு... அத்திப் பழ ஜூஸ் குடிங்க... டாப் 5 நன்மைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News