மன அழுத்தத்தை போக்கி மூளையை சுறுசுறுப்பாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

மன அழுத்தம் என்பது இன்று அதிகம் பேசப்படும் ஒரு உளவியல் பிரச்னை. உடலைவிட மன ரீதியான பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர்தான் இன்று அதிகமாக உள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 27, 2023, 05:33 PM IST
  • போட்டி நிறைந்த காலத்தில் மூளை சுறுசுறுப்பாக இருந்தால் தான், வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
  • நீடித்த நோய், மருந்துகளை நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவையும் மன அழுத்தத்திற்கான காரணமாக இருக்கலாம்.
  • நாள்பட்ட மன அழுத்தம் மூளையில் அதிக அளவு வேலைப்பளுவையும், அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.
மன அழுத்தத்தை போக்கி மூளையை சுறுசுறுப்பாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்! title=

மன அழுத்தம் என்பது இன்று அதிகம் பேசப்படும் ஒரு உளவியல் பிரச்னை. உடலைவிட மன ரீதியான பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர்தான் இன்று அதிகமாக உள்ளனர். வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம். குடும்பம், வேலை, தனிப்பட்ட பிரச்னைகள் என ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அன்றாட வேலைகள் பாதிக்கப்படும்போதும், மனதிற்கு பிடிக்காத வேலைகல் செய்யும் போதும், வழக்கத்திற்கு மாறாக ஒரு செயலைச் செய்யும்போதும், மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை வாழ்வதாலும் என பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படலாம். நீடித்த நோய், மருந்துகளை நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவையும் மன அழுத்தத்திற்கான காரணமாக இருக்கலாம். இந்த மன அழுத்தம் மூளையில் செயல்பாட்டை பாதிக்கின்றன. 

இன்றைய போட்டி நிறைந்த காலத்தில் மூளை சுறுசுறுப்பாக இருந்தால் தான், வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். நாள்பட்ட மன அழுத்தம் மூளையில் அதிக அளவு வேலைப்பளுவையும், அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இதனால் இரத்த அழுத்தம், மன சோர்வு, எதிலும் கவனம் செலுத்த இயலாமை, கடுமையான தலைவலி ஆகியவை ஏற்படும். .

மன அழுத்தத்தை போக்கி மூளையை சுறுசுறுப்பாக்கும் ஆயுர்வேத மூலிகைகள் 

மனச் சோர்வைத் தவிர்க்க மூன்று ஆயுர்வேத மருந்துகள் பலன் தரும். இது நிச்சயம் உங்களுக்கு மன நிம்மதியைத் தரும். இதில் அஸ்வகந்தா, சங்கபுஷ்பம் மற்றும் பிராமி ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | Jaggery Benefits: ‘இந்த’ செய்தியை படித்தால் சர்க்கரையில் இருந்து வெல்லத்திற்கு மாறிடுவீங்க!

பிராமி 

ஆயுர்வேதத்தில் மிகவும் சிறந்த மூலிகையாகவும் பாதுகாப்பான மூலிகையாகவும் கருதப்படும் பிராமி உடலில் உள்ள கார்டிசோல் அல்லது மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைப்பதன் மூலம், மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் போக்க உதவுகிறது. மேலும் இது நினைவாற்றலையும் அதிகரிக்கும். எனவே மறதி பிரச்சனை நீங்க, பிராமியை உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா ஒரு தெய்வீக மருந்து. நாம் அனைவரும் தம் அன்றாட வாழ்க்கையில், ஏதேனும் ஒரு வகையில் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறோம். மன அழுத்தத்தை போக்க அஸ்வகந்தா மிகவும் நன்மை பயக்கிறது. மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே இதனை உட்கொள்ள வேண்டும். 

சங்கபுஷ்பம்

சங்கபுஷ்பம் மனதை கூர்மையாக்க மிகவும் உதவுகிறது. இது சங்கபுஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. இதனை உட்கொள்வதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். பூச்செடிக்கும் மருத்துவ குணம் ஏராளமாக உண்டு. இது மூச்சுத் திணறல் சுவாசக் கோளாறு, இருதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை போக்கும். சங்குப்பூ இலைகள் குடல் புழுக்களைக் கொல்லும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சேதமடைந்த நுரையீரலுக்கும் புத்துயிர் கொடுக்கும் ‘வஜ்ரதந்தி’ மலர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News