Health Tips: உடல் எடை குறைய ஓமம் -சீரகம் அடங்கிய ‘மேஜிக் பானம்’

என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லையே என அங்கலாய்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். அப்படி பட்டவர்களுக்கு இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 17, 2021, 07:55 AM IST
  • உடல் பருமன் பல்வேறு நோய்களுக்கான ரிஷிமூலமாக இருக்குகிறது.
  • ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம் காரணமாக உடல் பருமன் ஏற்படுகிறது.
  • உடல் பருமன் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது
Health Tips: உடல் எடை குறைய ஓமம்  -சீரகம் அடங்கிய ‘மேஜிக் பானம்’  title=

என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லையே என அங்கலாய்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். அப்படி பட்டவர்களுக்கு இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பரபரப்பான இயந்திர வாழ்க்கையில் எடை அதிகரிப்பு பொதுவானதாகிவிட்டது.  அதிகரித்த எடையை, குறைப்பது ஒரு மிகப்பெரிய சவால். இதற்காக சிலர் ஜிம்மிற்கு சேர்ந்து கடுமையான பயிற்சி செய்கிறார்கள். அதற்காக அதிக பணம் செலவழிக்கிறார்கள், சிலர் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுகிறார்கள். 

உடல் எடையை குறைப்பது ஏன் முக்கியம்

உடல் பருமன் பல்வேறு நோய்களுக்கான ரிஷிமூலமாக இருக்குகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம் காரணமாக பெரும்பாலான மக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். உடல் பருமன் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், யூரிக் அமிலம் அதிகரித்தல் மற்றும் நீரிழிவு போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. அதனால், உடல் பருமனை குறைப்பது என்பது முக்கியமானதாகிறது.

நாங்கள் உங்களுக்கு சொல்லும் வீட்டு வைத்தியம் சீரகம்-ஓமத்திலிருது  தயாரிக்கப்படுகிறது. சீரகம் மற்றும் ஓமம் இரண்டிலும் எடை குறைக்க உதவும் அம்சங்கள் நிறைந்துள்ளன. இதனால், உடலின் வளர் சிதை மாற்றம் அதிகரிக்கிறது. அதாவது மெடபாலிஸம் அதிகரிக்கிறது. இது உடல் எடையயை குறைக்க மிகவும் அத்தியாவசியமானது. இந்த இரண்டையும் ஒன்றாக உட்கொள்வதன் மூலம், நீங்கள் மிக வேகமாக உடல் எடையை குறைக்க முடியும். 

ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்

சீரகம் எடை குறைக்க எப்படி உதவுகிறது

ஆயுர்வேத மருத்துவரர்கள் சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு ( Anti-Inflammatory) கூறுகள் காணப்படுகின்றன, இது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவும். இதனுடன், அதில் காணப்படும் பிற கூறுகளும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இது உடல் பருமனைக் குறைக்கிறது. இது தவிர, சீரகம் உடலில் இருந்து நச்சுப் பொருள்களை அகற்ற உதவுகிறது. இது எடை குறைக்க உதவுகிறது. சீரகம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

உடல் எடை குறைய உதவும் ஓமம்

இரும்பு, கால்சியம், ஃபைபர், பாஸ்பரஸ் தவிர, பல ஊட்டச்சத்துக்கள் ஓமத்தில் உள்ளன, இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். ஓமம் குறைந்த கலோரி கொண்ட உணவாகும். இது உடல் எடையைக் குறைக்க உதவும். அதில் காணப்படும் கூறுகள் வளர்சிதை மாற்ற விகிதத்தை வலிமையாக்குகின்றன. இது நார்ச்சத்துக்கான ஒரு சிறந்த மூலமாகும்
ஓமம் மற்றும் சீரகம்

ஓமம் மற்றும் சீரகம் சேர்ந்த கஷாயம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.இதை தயாரிக்க, உங்களுக்கு ஒரு ஸ்பூன் சீரகம், அதே அளவு சோம்பு , மற்றும் ஒரு ஸ்பூன் ஓமம் தேவைப்படும்.

- முதலில், ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

- இப்போது அதில் சீரகம், சோம்பு மற்றும் ஓமத்தை போடவும்.

- அது நன்றாக கொதித்து பாதியான உடன், ​​அதில் தேன் சேர்க்கவும்

- வெதுவெதுப்பாக இருக்கும் போது இதனை அருந்தவும்.

ALSO READ | உணவே மருந்து: பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் தயிர்

Trending News