மருக்களை அடியோடு நீக்கும் ‘பூண்டு - வெங்காயம்’ அடங்கிய மேஜிக் பேஸ்ட் !

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும். பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். இந்த மருக்களால் எந்த விதமான சரும பிரச்சனையும் இல்லை என்றாலும், இவை அழகை கெடுக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 27, 2022, 03:41 PM IST
  • சருமத்தில் முகத்தில் மெலனின் அதிகமாக இருப்பதால், முகத்தில் பெரிய மருக்கள் உருவாகும்.
  • சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும். பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும்.
  • இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.
மருக்களை  அடியோடு நீக்கும்  ‘பூண்டு - வெங்காயம்’ அடங்கிய மேஜிக் பேஸ்ட் ! title=

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும். பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். இந்த மருக்களால் எந்த விதமான சரும பிரச்சனையும் இல்லை என்றாலும், இவை அழகை கெடுக்கிறது. கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும். மருக்கள் பொதுவாக முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில்  தோன்றும். இதற்காக சிலர் பணம் அதிகம் செலவழித்து அறுவை சிகிச்சை மூலம் நீக்குகின்றனர். ஆனால், செலவில்லாமல், பக்க விளைவு ஏதும் இல்லாமல் வீட்டில் நாம் தினம் உபயோகிக்கும் பொருளை வைத்தே மருக்களை  நீக்கி விடலாம். 

பொதுவாக, சருமத்தில் முகத்தில் மெலனின் அதிகமாக இருப்பதால், முகத்தில் பெரிய மருக்கள் உருவாகும். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமானால், இதற்கு வீட்டில் பயன்படுத்தும் காய்கறி, பூண்டு போன்றவற்றை பயன்படுத்தலாம், இதனுடன் சில பொருட்களை கலந்து  பயன்படுத்தும் போது, சிறப்பான தான் பலன் கிடைக்கும். மருக்களை நீக்க, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கும் வீட்டு மருந்தை தயாரிக்கும் விதத்தை அறிந்து கொள்ளலாம்.

பூண்டு 

பூண்டைப் பயன்படுத்துவதன் மூலம், முகம் மற்றும் கழுத்தில் உள்ள மருக்களை நீக்கலாம். இதற்காக, பூண்டை உரித்து மூன்று அல்லது நான்கு பற்களை பிரிக்கவும். அதனை அரைத்து பின்னர் மருவில் தடவி அப்படியே விட்டு விடவும். சுமார் 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு இறுதியாக சுத்தமான தண்ணீரில் கழுவவும். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால், சில நாட்களில் மருக்கள் முழுவதுமாக வேரிலிருந்து காய்ந்து விழுந்து விடும்.

மேலும் படிக்க | பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம் 

பூண்டு மற்றும் வெங்காயம்

முகத்தில் உள்ள மருக்களை நீக்க வெங்காயத்தையும் பூண்டுடன் கலந்து பயன்படுத்தலாம். இந்த இரண்டையும் முதலில் நன்றாக அரைத்து பின் அதன் சாற்றை எடுக்கவும். இப்போது பருத்தியின் உதவியுடன் மருக்கள் மீது தடவி சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் விடவும். இறுதியாக சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவவும்.

பூண்டு மற்றும் ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் பொதுவாக முடி வளர்ச்சி மற்றும் முடி வலிமைக்கு பயன்படுத்தப்படுகிறது, ஆனால் நீங்கள் பூண்டுடன் பயன்படுத்தினால், மருக்கள் உதிர்ந்து விடும். இதற்கு, 2 முதல் 3 பூண்டு பற்களை எடுத்து அரைத்து, அதில் சில துளிகள் ஆமணக்கு எண்ணெயைக் கலக்கவும். இரவில் தூங்கும் போது பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி, காலையில் தண்ணீரில் கழுவவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Health Alert: காலி வயிற்றில் சாப்பிடக் கூடாத சில உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News