தினமும் 30 நிமிட ஜாகிங்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்..!!

Benefits of Jogging  Daily: காலையில் நடைபயிற்சி, ஜாகிங் அல்லது லேசான நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில், ஜாகிங் ஒரு சிறந்த கார்டியோ உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 23, 2024, 01:16 PM IST
  • தினமும் 30 நிமிடங்கள் ஜாகிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.
  • அதிக காலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவும் ஜாகிங்.
  • இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க உதவும் ஜாகிங்.
தினமும் 30 நிமிட ஜாகிங்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்..!! title=

Benefits of Jogging  Daily: பெரும்பாலான மக்கள் தற்போது உடற்பயிற்சி குறித்த முக்கியத்துவத்தை உணர்ந்து வருகின்றனர். அதிகாலையில் பூங்காக்கள் மற்றும் தெருக்களில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதையும், ஓடுவதையும் நீங்கள் நிச்சயம் காணலாம். மேலும், காலையில் நடைபயிற்சி, ஜாகிங் அல்லது லேசான நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில், ஜாகிங் ஒரு சிறந்த கார்டியோ உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. 

தினமும் ஜாகிங் செய்வது இதயத்தை ஆரோக்கியமாக வைத்து, இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. வெறும் 30 நிமிட ஜாகிங் உங்கள் இதய நோய் முதல் பல விதமான நோய்கள் வராமல் உங்கள் உடலை பாதுகாக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜாகிங் உடல் எடையை குறைக்கவும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தினமும் ஜாகிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன (Health Tips) என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தினமும் 30 நிமிடங்கள் ஜாகிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

இதயம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஜாகிங்:

ஓடுவது அல்லது ஜாகிங் செய்வது ஒரு சிறந்த கார்டியோ வொர்க்அவுட்டாகும். கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஜாகிங் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான பிரச்சனைகளின் ஆபத்தை பெருமளவு குறைக்கும். இது தவிர சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவையும் கட்டுக்குள் இருக்கும்.

நுரையீரலை வலுப்படுத்தும் ஜாகிங்:

நுரையீரலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க விரும்பினால், தினமும் ஜாகிங் செய்ய வேண்டும். ஜாகிங் செய்வதன் மூலம் சுவாச பிரச்சனைகள் குணமாகும். இதன் மூலம், நுரையீரல்கள் சிறப்பாக செயல்படுவதோடு, முழு உடலுக்கும் ஆக்ஸிஜனை வழங்கும் செயல்முறை மேம்படும்.

இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க உதவும் ஜாகிங்:

நீங்கள் BP நோயாளியாக இருந்தால், தினமும் ஜாகிங் செய்ய வேண்டும். முதலில் எளிய நடபயிற்சியாக தொடங்கி, பின்னர் படிப்படியாக விறுவிறுப்பான நடைபயிற்சிக்கு செல்லவும், பின்னர் ஜாகிங் செய்யவும். இதன் மூலம் ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த நாளங்கள் விரிவடைவதால் உடலில் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

மேலும் படிக்க | Summer Tips: கடும் கோடையிலும் உடலை கூலாக வைத்திருக்க... சில சூப்பர் உணவுகள்!

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஜாகிங்:

தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி,  நடைபயிற்ச்சி அல்லது ஜாகிங் செய்பவர்களுக்கு மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அத்தகையவர்களுக்கு மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் குறைவாக இருக்கும். இது போன்ற மன பிரச்சனைகளால் நீங்கள் சிரமப்பட்டால் கண்டிப்பாக தினமும் நடைப்பயிற்சி செல்லுங்கள். ஜாகிங் மூளையில் எண்டோர்பின்கள் எனப்படும் உணர்வு-நல்ல ஹார்மோன்களை வெளியிடுகிறது, இது உங்களை நன்றாக உணர வைக்கிறது.

அதிக காலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவும் ஜாகிங்:

நடைபயிற்சி முதல் ஜாகிங் வரை அனைத்து விதமான உடல் பயிற்சிகளும் உடலில் சேரும் கொழுப்பை குறைக்கிறது. எனினும், ஜாகிங் வேகமாக உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது அதிக கலோரிகளை எரிக்கிறது. இதன் பலனை உங்கள் உடலில் அதன் விளைவு விரைவில் தெரியும். தினமும் 30 நிமிடம் ஜாகிங் செய்வதன் மூலம் உடல் பருமனை எளிதில் குறைக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சவால் விடும் சுகர் லெவலை சுலபமாக குறைக்க இந்த இலைகளை சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News