அதிக சீரகம் ஆபத்து!! அச்சப்படுத்தும் சீரகத்தின் பக்க விளைவுகள் இதோ

Side Effects Of Jeera: நமது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் போதிலும், சீரகத்தின் அதிகப்படியான பயன்பாடு ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 1, 2023, 03:11 PM IST
  • வயிற்றில் உள்ள வாயுவை போக்க சீரகம் நன்மை பயக்கும்.
  • ஆனால் இதை அதிகமாக உட்கொண்டால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
  • சீரகத்தை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
அதிக சீரகம் ஆபத்து!! அச்சப்படுத்தும் சீரகத்தின் பக்க விளைவுகள் இதோ title=

சீரகத்தின் பக்க விளைவுகள்: உணவின் சுவையை அதிகரிக்க மக்கள் சீரகத்தை உணவில் பயன்படுத்துகிறார்கள். இதில் பல வித மருத்துவ குணங்களும் உள்ளன. உடல் எடையை குறைக்க சீரகம் பயன்படுகிறது. சீரகம் பல வித நோய்களுக்கும் மருந்தாக உள்ளது. வைட்டமின் ஈ, ஏ, இரும்புச்சத்து, தாமிரம் போன்ற தாதுக்கள் சீரகத்தில் காணப்படுகின்றன. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 

நமது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் போதிலும், சீரகத்தின் அதிகப்படியான பயன்பாடு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆம், பலர் உடல் எடையை குறைக்க அதிக சீரக தண்ணீரை குடிப்பார்கள் அல்லது சீரகத்தை உட்கொள்வார்கள். இது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். இதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படலாம்!! ஆனால் இது உண்மைதான்!! சீரகத்தை உட்கொள்வதால் உடலுக்கு என்னென்ன தீங்குகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

சீரகத்தை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு இந்த கேடுகளை ஏற்படுத்தும்:

நெஞ்செரிச்சல்

வயிற்றில் உள்ள வாயுவை போக்க சீரகம் நன்மை பயக்கும். ஆனால் இதை அதிகமாக உட்கொண்டால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம். ஏனெனில் சீரகம் இரைப்பை குடலில் இருந்து பித்தப்பை பிரச்சனையை மிக வேகமாக நீக்குகிறது. இதன் காரணமாக உங்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படலாம். ஆகையால் சீரகத்தை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க | WHO Warning: கோவிட் தொற்றினால் உலகில் மாரடைப்பு நீரிழிவு பக்கவாதம் அபாயம் அதிகரிப்பு 

அதிக இரத்தப்போக்கு

பெண்கள் சீரகத்தை அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் சீரகத்தை சாப்பிடுவதால் மாதவிடாய் காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆம், மாதவிடாயின் போது சீரகத்தை உட்கொண்டால், அதிக இரத்தப்போக்கு பிரச்சனை ஏற்படலாம். அதனால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

வாந்தி பிரச்சனை

அதிக சீரக நீரை உட்கொள்வது உங்களுக்கு மூளை தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனுடன் வாந்தி பிரச்சனையும் வரலாம். ஆகையால் சீரகத்தை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

கல்லீரல் பாதிப்பு

சீரகத்தில் உள்ள எண்ணெய் உங்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் அதை அதிகமாக உட்கொண்டால், சிறுநீரகம் அல்லது கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ஆகையால் சீரகத்தை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? இலவங்கப்பட்டை உங்களுக்கு கை கொடுக்கும்!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News