நீரிழிவு நோயை ஓட விரட்டும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்!

Diabetes Home Remedies: சர்க்கரை நோயாளிகளுக்கு மிக சிறந்த வகையில் பலனளிக்கக் கூடிய கோதுமை மாவு அல்லாத பிற சில பிரத்யேக மாவுகளில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்திகளை அறிந்து கொள்ளலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2023, 02:46 PM IST
  • நீரிழிவு நோயாளிகள் தங்கள் அன்றாட உணவில் சில உணவுகளைச் சேர்த்துக்கொள்வதால், அவர்களின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • பெரும்பாலானோர் கோதுமை மாவில் செய்யப்பட்ட ரொட்டியை மட்டுமே சாப்பிடுவார்கள்.
  • உடலுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைத்து ஆரோக்கியமாக இருக்கும்.
நீரிழிவு நோயை ஓட விரட்டும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்! title=

சர்க்கரை நோய் கரையான் போல உடம்பை அரித்து விடும். அதனால் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், உணவில் சிறிது கவனக்குறைவால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக அதிகரித்து, ஆரோக்கியம் கெடும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் அன்றாட உணவில் சில உணவுகளைச் சேர்த்துக்கொள்வதால், அவர்களின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். பொதுவாக, பெரும்பாலானோர் கோதுமை மாவில் செய்யப்பட்ட ரொட்டியை மட்டுமே சாப்பிடுவார்கள். ஆனால், இன்று சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த வகையில் பலனளிக்கக் கூடிய கோதுமை மாவு அல்லாத பிற சில பிரத்தியேக மாவுகளில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்திகளை அறிந்து கொள்ளலாம். இதன் காரணமாக உடலுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைத்து ஆரோக்கியமாக இருக்கும்.

இது தவிர, மிக முக்கியமாக இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த மாவு ரொட்டிகள் நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொள்வோம். கீழே குறிப்பிட்டுள்ள சில மாவுகள் இரத்த சர்க்கரை கட்டுக்குள் வைக்கிறது.

அமர்நாத் மாவு

சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக அமர்நாத் மாவு என அழைக்கப்படும் தண்டுக் கீரையின் விதைகளின் மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அமர்நாத் தானியம் மிக அதிக புரதம் சத்து கொண்டுள்ளது. அமர்நாத், கோதுமையை விட அதிக அளவு புரதம் கொண்டுள்ளது. இதனுடன், இந்த மாவில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த மாவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் லிப்பிடுகள் உள்ளன. அமரந்த மாவு ரொட்டிகளை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவு சாதாரணமாக இருக்கும். மேலும் அமர்நாத் தானியத்தில் 6-10 சதவீதம் அத்தியாவசிய கொழுப்பு அமில எண்னெய்களை கொண்டுள்ளது. மனித உடல்கள் இந்த அத்தியாவசிய கொழுப்பு அமிளம்களை தயாரிக்க முடியாது. எனவே நமது உணவில் இருந்து தான் பெற வேண்டும்.

மேலும் படிக்க | குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

ராகி மாவு 

 ராகியின் மேற்புறத் தோலில் உள்ள பாலிஃபினால்களின் அளவு அரிசி, மைதா மற்றும் கோதுமையுடன் ஒப்பிடுகையில் பெரும் செறிவுடன் காணப்படுகிறது. ராகியின் புரத அளவை அரிசியுடன் ஒப்பிடுகையில், ராகியின் புரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளது. ராகி இரத்த சர்க்கரை அளவு மற்றும் ஹைப்பர் க்ளைசீமிக் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஆகியவற்றை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது.

சோள மாவு

சோளத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. சோள மாவை ரொட்டி செய்வது மட்டுமின்றி தோசை, இட்லி, உப்புமா போன்றவற்றை செய்தும் சாப்பிடலாம்.

ஓட்ஸ் மாவு

ஓட்ஸை அரைத்து மாவு தயார் செய்யலாம். இந்த மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இந்த மாவில் இருந்து ரொட்டி அல்லது பராத்தா செய்யலாம். இது தவிர பச்சைக் காய்கறிகள் அல்லது கீரைகளை அரைத்து ஓட்ஸ் மாவில் கலந்து சத்தான காய்கறி ரொச்ட்டி செய்யலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர, வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களும் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | முட்டையை ‘இப்படி’ சாப்பிட்டால் போதும்... ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு நீங்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News