உடலில் உள்ள கொழுப்பு உடனே குறைய இலவங்கப்பட்டை டீயில் இதை கலந்து குடித்தால் போதும்

Weight Loss Tips: நாம் நமது சமையைலில் பயன்படுத்தும் சில பொருட்களே கலோரி எரிப்பில் நமக்கு உதவும். இவை இயற்கையான முறையில் கலோரிகளை எரித்து, தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 27, 2024, 11:05 AM IST
  • உடல் கொழுப்பை கரைக்க இலவங்கப்பட்டை டீயில் தேன் கலந்து குடிக்கலாம்.
  • இது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் துகள்களை செயலற்றதாக்கி வெளியேற்றுகிறது.
  • இதன் மூலம் கொழுப்பை கரைப்பதில் உதவி கிடைக்கின்றது.
உடலில் உள்ள கொழுப்பு உடனே குறைய இலவங்கப்பட்டை டீயில் இதை கலந்து குடித்தால் போதும் title=

Weight Loss Tips: எடை இழப்புக்காக மக்கள் ஜிம்மில் பல மணிநேரம் செலவிடுகிறார்கள். அதுமட்டுமின்றி, இதற்காக பல்வேறு வகையான டயட்களையும் பின்பற்றுகிறார்கள்ள். ஆனால் பலருக்கு இவற்றாலும் எந்த வித பலனும் கிடைப்பதில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. தினசரி கலோரி அளவு பராமரிக்கப் படாதது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். குறைவான கலோரிகளை உட்கொள்ளாவிட்டால், உடல் எடையை குறைக்க முடியாது. ஆனால் கவலை கொள்ளத் தேவையில்லை. சில விஷயங்களை தினசரி உணவில் சேர்த்தால், நிச்சயமாக கலோரியை வேகமாக எரிக்கலாம். இதன் மூலம் தினமும் வழக்கத்தை விட அதிகமான கலோரி எரிக்கப்படும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

நாம் நமது சமையைலில் பயன்படுத்தும் சில பொருட்களே கலோரி எரிப்பில் நமக்கு உதவும். இவை இயற்கையான முறையில் கலோரிகளை எரித்து, தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க உதவுவதால் எந்த வித பக்க விளைவுகளும் இதனால் ஏற்படாது. அத்தகைய ஒரு சிறந்த பொருள் தான் இலவங்கப்பட்டை. இலவங்கப்பட்ட்டை தேநீர் இயற்கையாகவே கலோரிகளை எரிக்கும் ஆற்றல் கொண்டது. உடல் எடையை குறைக்க (Weight Loss) விரும்புபவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாக உதவுகிறது. இதுமட்டுமல்லாமல் இதனுடன் மேலும் ஒன்றை சேர்ந்தால் அதன் ஆரோக்கிய நன்மைகள் பன்மடங்கு அதிகரிக்கும். 

உடல் கொழுப்பை கரைக்க இலவங்கப்பட்டை டீயில் தேன் கலந்து குடிக்கலாம். எடை இழப்புக்காக இலவங்கப்பட்டை டீ குடிப்பவர்கள் அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் அதிக பலன்கள் கிடைக்கும். இந்த கலவை உடலில் சேரும் கொழுப்பைக் குறைக்க பெரிய வழியில் நன்மை அளிக்கும். இதில் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது எடை இழப்புக்கு இயற்கையான வழியில் உதவுகிறது.

மேலும் படிக்க | ஹீட் ஸ்ட்ரோக்: கோடையில் கவனமாக இருங்கள்! அதிக நேரம் உட்கார வேண்டாம்

இலவங்கப்பட்டை டீயுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

- இலவங்கப்பட்டை மற்றும் தேன் (Honey) கலந்த டீயை குடித்தால், உடலில் சேரும் அழுக்குகள் வெளியேறும். இது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் துகள்களை செயலற்றதாக்கி வெளியேற்றுகிறது. இதன் மூலம் கொழுப்பை கரைப்பதில் உதவி கிடைக்கின்றது. இது இயற்கையான டீடாக்ஸ் பானமாக அருந்தப்படுகின்றது.

- இலவங்கப்பட்டை தேநீர் இன்சுலின் அளவை சரியாக வைத்திருக்கிறது. இதன் மூலம் அதிக ஆற்றல் செல்களை அடைந்து வளர்சிதை மாற்றம் மேம்படுகின்றது.

- இலவங்கப்பட்டை தேநீர் (Cinnamon Tea) மற்றும் தேன் உட்கொண்டால் செரிமான அமைப்பு சீராகும். இதனால் நாம் உட்கொள்ளும் உணவு எளிதாக ஜீரணமாகி, கலோரிகள் விரைவாக எரிக்கப்படும். 

- இந்த  டீ பசியை அடக்குகிறது. இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் உட்கொள்வது கட்டுப்படுத்தப்படுகிறது. 

- இதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது.

- இப்படி பல வழிகளில் தேன் கலந்த இலவங்கப்படை தேநீர் எடை இழப்புக்கு பங்களிக்கின்றது. இந்த காரணிகள் அனைத்தும் எடை இழப்புக்கு பங்களிக்கின்றன. 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அடிக்கடி தலைவலி வருகிறதா... இந்த பரிசோதனைகளை கண்டிப்பா பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News