நீரிழிவு நோயாளிகள் கவலைப்படாம மாம்பழம் சாப்பிடலாம்... ‘இதை’ மட்டும் கவனத்தில் கொள்ளவும்!

Mango and Diabetes: மாம்பழத்தில் இயற்கை சர்க்கரை மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 6, 2023, 02:52 PM IST
  • நீரிழிவு நோயில், இரத்த சர்க்கரையின் அளவை உடனேயே அதிகரிக்கும் பழங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது.
  • மாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.
  • மாம்பழத்தில் இயற்கை சர்க்கரை மிக அதிகமாக உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் கவலைப்படாம மாம்பழம் சாப்பிடலாம்... ‘இதை’ மட்டும் கவனத்தில் கொள்ளவும்! title=

கோடை காலம் என்றாலே மாம்பழத்தின் சீசன் தொடங்கி விடும். மாம்பழம் என்பது அனைவருக்கு மிக பிடித்த கனிகளில் முதலிடம் வகிப்பது. மாம்பழம் பிடிக்காதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு, அதனை சாப்பிடலாமா கூடாதா என்ற எண்ணம் வருகிறது. ஏனெனில் மாம்பழத்தில் இயற்கை சர்க்கரை மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.

மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்து

மாம்பழத்தில் உள்ள கலோரிகளில் 90 சதவீதம் சர்க்கரையில் மட்டுமே உள்ளது. மேலும், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் சி, தாமிரம், ஃபோலேட், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் ஆகியவற்றுடன் நார்ச்சத்தும் மாம்பழத்தில் நிறைந்து உள்ளது.

மாம்பழமும் இரத்த சர்க்கரை அளவும்

நீரிழிவு நோயில், இரத்த சர்க்கரையின் அளவை உடனேயே அதிகரிக்கும் பழங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஆனால் மாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை சர்க்கரை மெதுவாக இரத்தத்தை அடைய உதவுகின்றன என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மாம்பழங்களின் GI அளவு

மாம்பழத்தின் GI மதிப்பு 51 ± 5 என்ற அளவிற்கு இடையில் உள்ளது. 55 க்கும் குறைவான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. எனவே,  மாம்பழத்தினால் ஏற்படும் சிறு பாதிப்பை குறைக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 உதவிக்குறிப்புகளை கண்டிப்பாக பின்பற்றவும்.

மேலும் படிக்க | Diabetes Control: இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா மூலிகையை ‘இப்படி’ பயன்படுத்தவும்!

1. சாப்பிடும் நேரத்தில் கவனம் செலுத்துங்கள்

நீங்கள் மாம்பழத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க விரும்பினால், அதன் உட்கொள்ளும் நேரத்தில் கவனம் செலுத்துங்கள். காலை உணவு மற்றும் உணவுக்கு இடையில் நீங்கள் தாராளமாக சாப்பிடலாம். ஆனால் இரவு உணவு அல்லது உணவுடன் மாம்பழம் சாப்பிடக்கூடாது.

2. அளவை சமநிலைப்படுத்தவும்

நீரிழிவு நோயில் மாம்பழங்களினால் ஏற்படும் பாதிப்பை குறைக்க சாப்பிடும் அளவில் கவனம் தேவை. ஏனெனில், எதையுமே அதிகமாக சாப்பிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். நீங்கள்  உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு எவ்வளவு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்பதை நிர்ணயித்து கொள்ளவும். இதற்கு ஊட்டச்சத்து நிபுணரை ஆலோசனை செய்யலாம்.

3. மாம்பழத்துடன் புரதம் சாப்பிடுங்கள்

நார்ச்சத்து போலவே, புரோட்டீனும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை திடீரென உயர்வதைத் தடுக்கிறது. ஆனால் மாம்பழத்தில் புரதம் இல்லை. எனவே அதனுடன் முட்டை அல்லது சில பாதாம் சாப்பிடுவதன் மூலம் புரதத்தை  சேர்க்கலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | வாழ்க்கையை முடக்கும் யூரிக் அமில பிரச்சனை! தீர்வைத் தரும் ‘மேஜிக்’ ஜூஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News