உடல் பருமன் குறைய... கோதுமைக்கு பதிலாக ‘இந்த’ சப்பாத்திகளை டயட்டில் சேருங்கள்!

Weight Loss  Rotis: உணவில் செய்யப்படும் சிறு மாற்றங்கள் உடல் எடையை குறைக்க உதவும்  பெரும்பாலான வீடுகளில் கோதுமை மாவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதற்கு பதிலாக பயன்படுத்தப்படும் பல ஆரோக்கியமான மாவு பற்றி அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 26, 2023, 01:16 PM IST
  • சில முழு தானிய மாவு உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.
  • ராகி மாவில் நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
  • அமர்நாத் மாவு என அழைக்கப்படும் தண்டுக் கீரையின் விதைகளின் மாவு.
உடல் பருமன் குறைய... கோதுமைக்கு பதிலாக ‘இந்த’ சப்பாத்திகளை டயட்டில் சேருங்கள்! title=

சப்பாத்தி என்பது நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு. வட இந்தியாவில் மட்டுமல்லாது, தற்போது தென்னிந்தியாவிலும் மிகவும் அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது. சப்பாத்தி தயாரிக்க பெரும்பாலான வீடுகளில் கோதுமை மாவு தான்  விரும்புபவர்கள், கோதுமைக்கு பதிலாக வேறு சில மாவுகளை பயன்படுத்துவது வியக்கத் தக்க பலன்களை தரும். இந்நிலையில், உடல் எடையை குறைக்க உதவும் பல ஆரோக்கியமான மாவு பற்றி அறிந்து கொள்ளலாம்.  சப்பாத்தி  தயாரிக்க பொதுவாக கோதுமை பயன்படுத்தப்படும் நிலையில், கோதுமைக்கு பதிலாக, வேறு சில முழு தானிய மாவு பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும். கோதுமை மாவில் கார்போஹைட்ரேட் மற்றும் சற்று அதிக கலோரிகள் உள்ளன. ஆனால் சில முழு தானிய மாவு உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். ஏனெனில் அதிவற்றில் அதிக நார் சத்து இருக்கிறது. இங்கே கீழே குறிப்பிட்டுள்ள மாவுகளில் மாவுச் சத்து இல்லாததால், சாப்பாத்தி செய்வது சிறிது கடினமாக இருக்கும். அதனால், ஆரம்பத்தில், இந்த மாவுகளுடன் சிறிது கோதுமை மாவை சேர்த்துக் கொண்டு செய்வது எளிதாக இருக்கும். 

ராகி மாவு

ராகி என்னும் கேழ்வரகில் புரத சத்து நிறைந்துள்ளது. ராகியின் புரத அளவை அரிசியுடன் ஒப்பிடுகையில், ராகியின் புரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளது. ராகி மாவில் நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். நீங்கள் அடிக்கடி உணவை உண்ண வேண்டியதில்லை. ராகியின் மேற்புறத் தோலில் உள்ள பாலிஃபினால்களின் அளவு அரிசி, மைதா மற்றும் கோதுமையுடன் ஒப்பிடுகையில் பெரும் செறிவுடன் காணப்படுகிறது. இது எளிதில் ஜீரணமாகும். ராகி மாவில் பசையம் இல்லை. உடல் பருமனுக்கு மட்டுமல்லாது சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த மாவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தினை மாவு

முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளை தடுக்கும் திறன் கொண்ட திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற மேலும் பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. திணை அரிசி, சிறு தானிய வகைகளில் மிக முக்கியமான ஒன்று. தினை மாவில் நல்ல அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் சில சத்துக்கள் இருப்பதால் நம் உடலுக்கு ஆரோக்கியமானது. தினை மாவில் புரதம் உள்ளது. இதில் கார்போஹைட்ரேட் என்னும் பசையம் இல்லை. இது நீண்ட நேரம் பசி உணர்வே இருக்காது. வயிறு நிறைந்திருப்பதால், உணவு உட்கொள்வது குறைந்து , இதனால் எடை குறையும்.

ஓட்ஸ் மாவு

காலையில் ஓட்ஸ் சாப்பிடுவது நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உங்கள் உணவில் ஓட்ஸை சேர்த்துக் கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். ஓட்ஸ் எடையை குறைப்பது மட்டும் இன்றி,  இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும். 

அமர்நாத் மாவு

அமர்நாத் மாவு என அழைக்கப்படும் தண்டுக் கீரையின் விதைகளின் மாவு அதிக புரதம் சத்து கொண்டுள்ளது. அமர்நாத், கோதுமையை விட அதிக அளவு புரதம் கொண்டுள்ளது. புரோட்டின் எடை இழப்புக்கு மிகவும் முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே.  இதனுடன், இந்த மாவில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது, . இதனுடன் இந்த மாவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் லிப்பிடுகள் உள்ளன. அமரந்த மாவு ரொட்டிகளை உட்கொள்வதன் மூலம், தொப்பை கொழுப்பு கரைவது மட்டுமின்றி இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் அமர்நாத் தானியத்தில் 6-10 சதவீதம் அத்தியாவசிய கொழுப்பு அமில எண்னெய்களை கொண்டுள்ளது. இதனால் இதய ஆரோக்கியத்திற்கும், எலும்புகள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

குயினோவா மாவு

 குயினோவா மாவில் நிறைய சத்துக்கள் உள்ளன. எனவே இது ஊட்டச்சத்துக்களின் சக்தி இல்லமாகும். குயினோவா மாவு பசையம் இல்லாதது. புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்றவை இதில் ஏராளமாக உள்ளன. இது ஆரோக்கியமற்ற கலோரிகளை அகற்ற உதவுகிறது. இந்த மாவு நம் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.  இதனால் பசி குறைகிறது. இதனால் நமது எடையை குறைக்க உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

Trending News