வியக்க வைக்கும் தர்பூசணி விதைகள்! இதில் இத்தனை மேஜிக் நன்மைகள் இருக்கா?

Benefits Of Watermelon Seeds: தர்பூசணி பழத்தை பலருக்கும் பிடிக்கும், ஆனால் இந்த பழத்தில் மட்டுமல்ல, அதன் விதையிலும் பல்வேறு நன்மைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 30, 2024, 02:58 PM IST
  • தர்பூசணி விதைகளில் உள்ள நன்மைகள்
  • இதை சாப்பிட்டால் என்ன ஆகும்?
  • முடிக்கும் நன்மை அளிக்கிறது தர்பூசணி விதைகள்
வியக்க வைக்கும் தர்பூசணி விதைகள்! இதில் இத்தனை மேஜிக் நன்மைகள் இருக்கா? title=

Benefits Of Watermelon Seeds: வெயில் காலம் ஆரம்பித்தாலே நம் நினைவிற்கு வரும் பழங்களுள் முதன்மையான இடத்தை பெற்றிருப்பது, தர்பூசணிதான். இந்த பழத்தை வெயில் காலத்தில் சாப்பிட்டால் உடல் சூடு தணியும் என பிறர் கூற கேட்டிருப்போம். தர்பூசணி பழம் சாப்பிடுவதால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் நிவர்த்தி பெரும் என்பதும் நமக்கு தெரியும். ஆனால், அந்த தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளில் என்னென்ன மேஜிக் நன்மைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? 

தர்பூசணி விதை நன்மைகள்:

தர்பூசணி பழத்தில் உள்ள நீர்ச்சத்து, உடலுக்கு வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை கொடுக்கும் என மருத்துவர்கள் கூறுவதுண்டு. இதனாலேயே, பலர் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் போது தர்பூசணி பழத்தை சாப்பிடுவர். தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளிலும் ஜிங்க், மாக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சில கொழுப்பு சத்துகள் ஆகியவை இருக்கின்றன. தர்பூசணி பழ விதைகளை சாப்பிடுவதால் உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் என்றும், இது இருதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, உடலில் நோயெதிர்ப்பு சக்தியையும் தர்பூசணி விதைகள் அதிகரிக்குமாம். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: 

உடலின் வலுவான நோயெதிர்ப்பு சக்தி, Zinc அளவை பொறுத்துதான் அமைந்துள்ளது. தர்பூசணி விதையில் Zinc சத்து அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இது, உடலில், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செல்களை தூண்டி விடுமாம். இதனால் பிற நோய் பாதிப்புகள் உடலை எளிதில் பாதிக்காமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

நல்ல கொழுப்புகள்:

மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பல்நிறைவுற்ற கொழுப்புகள், நல்ல கொழுப்புகளுக்கு உதாரணமாக இருக்கிறது. இரத்தத்தில் கொழுப்பு கலக்காமல் தடுப்பதற்கு இந்த நல்ல கொழுப்புகள் தேவை என்கின்றனர், மருத்துவர்கள். இதனால் மாரடைப்பு ஏற்படுவதையும், பக்கவாத நோயினால் பாதிக்கப்படுவதையும் தவிர்க்க முடியும். தர்பூசணி விதையில் இருக்கும் நல்ல கொழுப்புகள் உடலுக்கு, நற்பயன் அளிக்கும். 

மேலும் படிக்க | அத்தியாவசியமானதாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான்! இது நியாசின் எச்சரிக்கை!

செரிமானத்தை மேம்படுத்துகிறது:

தர்பூசணி விதைகளில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் நற்கொழுப்புகள் நமது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் செய்கிறது. தர்பூசணியையும், தர்பூசணி விதைகளையும் உட்கொள்வது செரிமானத்தை அதிகரிப்பதில் பங்கு வகிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

முடிக்கு நல்லது:

தர்பூசணி விதைகளில் இரும்புச்சத்து, புரதம், மக்னீசியம் மற்றும் கப்பர் சத்துகள், முடி ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க உதவுமாம். இதனால், முடி அடர்த்தியாகி வலிமையாகவும் மாறும் என கூறப்படுகிறது. இந்த விதைகளால் ஏற்படும் மாங்கனீசு எனும் திறன், முடியை உடைவதில் இருந்தும் உதிர்வதில் இருந்தும் பாதுகாக்கிறது. 

எலும்புகளை வலுவாக்க உதவும்:

எலும்புகளை வலுவாக்க, கால்சிய சத்துகள் உடலுக்கு தேவை என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் எலும்புகளை வலுவாக்க கண்டிப்பாக தர்பூசணி விதைகள் உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில், நல்ல மினரல் சத்துகளும் உள்ளதாம். வலுவான தசையை உருவாக்கவும், நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் தடுக்கவும் கூட, தர்பூசணி விதைகள் உதவும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | இஞ்சி இடுப்பழகி ஆகணுமா... ஒரே வாரத்தில் 2 கிலோ எடைய குறைய ‘சில’ டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News