மாம்பழ பிரியரா நீங்கள்? அதை இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்

Mango benefits: மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன், மாம்பழத்தை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 7, 2022, 07:41 PM IST
  • ஊறவைத்த மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 4 நன்மைகள்.
  • தோல் பிரச்சனைகள் இருக்காது.
  • உடல் பருமன் குறையும்.
மாம்பழ பிரியரா நீங்கள்? அதை இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள் title=

உண்ணும் முன் மாம்பழத்தை ஏன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்: கோடை காலத்தை பலர் விரும்புவதில்லை. ஏனெனில் அதிகரிக்கும் வெப்பநிலை, சுட்டெரிக்கும் வெயில், வியர்வை என பலவற்றால் கோடை காலம் கொடூர காலமாக பலருக்குத் தோன்றுகிறது.

ஆனால், சில காரணங்களுக்காக நாம் கோடை காலத்தை ஆவலாக எதிர்பார்ப்பதும் உண்டு. அந்த காரணங்களில் முக்கியமான ஒன்று மாம்பழம்!!

மாம்பழம் சாப்பிட பல வழிகள்
மாம்பழத்தை பல விதங்களில் சாப்பிடலாம். பலர் அதை துண்டுகளாக வெட்டி உண்ண விரும்புவார்கள். பலர் அதை உறிஞ்சி சாப்பிட விரும்புகிறார்கள். இது தவிர, மாம்பழ ஷேக், மாம்பழ ஜூஸ், மாம்பழ பாப்பட் மற்றும் மாம்பழ மிட்டாய் போன்றவையும் உள்ளன. ஆனால், மாம்பழத்தை நேரடியாக அப்படியே சாப்பிடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

ஊறவைத்த மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 4 நன்மைகள்
மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன், மாம்பழத்தை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அவ்வாறு செய்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஊறவைத்த மாம்பழம் ஏன் நமக்கு நன்மை பயக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

1. தோல் பிரச்சனைகளைத் தடுக்கும்
மாம்பழம் சாப்பிடுவதால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவை வர ஆரம்பிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஊறவைத்த மாம்பழத்தை சாப்பிட்டால், இதுபோன்ற பிரச்சனைகள் குறையும்.

மேலும் படிக்க | வியர்வையால் உடல் துர்நாற்ற பிரச்சனையா: எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ 

2. உடலின் குளிர்ச்சி அப்படியே இருக்கும்
மாம்பழம் சாப்பிடுவது உடலில் வெப்பத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தெர்மோஜெனீசிஸ் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்குகிறது. மாம்பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால், இதுபோன்ற பிரச்சனைகளைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.

3. இரசாயனங்களைத் தவிர்க்கலாம்
மாம்பழம் வளரும் போது, ​​பூச்சியிலிருந்து பாதுகாக்க பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை நமது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. இதனால் கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் ஏற்படுவதுண்டு. இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. இதனுடன், தலைவலி மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளும் வரலாம். மாம்பழத்தை ஊறவைப்பது ஆபத்தான இரசாயனங்களை நீக்கி, பழத்தை உண்ணக்கூடியதாக மாற்றுகிறது.
 
4. உடல் பருமன் குறையும்
மாம்பழம் ஒரு வலுவான பைட்டோ கெமிக்கல் என்று அறியப்படுகிறது. எனவே, அதை அரை மணி நேரம் ஊற வைத்தால், அது எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் மாம்பழம் ஒரு நேசுரல் ஃபேட் பஸ்டர், அதாவது இயற்கையாகவே கொழுப்பை நீக்கும் பழமாக கருதப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | கொண்டைக்கடலையின் வியக்க வைக்கும் நன்மைகள்: தெரிஞ்சா விடவே மாட்டீங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News